மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 3 பேர் பலி + "||" + 3 killed in Chennai for coronavirus infection

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 3 பேர் பலி

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 3 பேர் பலி
சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 3 பேர் பலியாகி உள்ளனர்.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.  பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது.  அரசும் தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.  எனினும், மக்கள் ஒத்துழைப்பு அவசியம் என சுட்டி காட்டியுள்ளது.

இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர்கள் உள்பட 3 பேர் இன்று பலியாகி உள்ளனர்.

அவர்களில் ஒருவர் சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த 77 வயது முதியவர் ஆவார்.  மற்றொருவர் கோயம்பேடு சந்தையை சேர்ந்த 56 வயது காய்கறி வியாபாரி ஆவார்.

இவர்கள் தவிர சூளைமேட்டை சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவரும் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளார்.  அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கடந்த 5ந்தேதி சிகிச்சைக்காக சேர்ந்து உள்ளார்.  அவருக்கு முன்பே உடல்நல குறைவு ஏற்பட்டிருந்தது.

காய்கறி வியாபாரி உள்பட 2 பேருக்கும் உடல்நல பாதிப்பு இருந்தது.  இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு நிலைமை சீரடைந்தவுடன் ஆஸ்திரேலிய பிரதமர் குடும்பத்துடன் இந்தியா வர வேண்டும் பிரதமர் மோடி அழைப்பு
கொரோனா பாதிப்பு நிலைமை சீரடைந்தவுடன் குடும்பத்துடன் ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியா வர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார்.
2. சீனாவுக்கு முன்னதாகவே நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கொரோனா இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம்...?
நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கொரோனா இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.
3. கொரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு..?
கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துமனையின் கட்டண விவரங்களை இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு அரசுக்கு பரிந்துரைத்தது.
4. இந்தியாவில் முதல் முறையாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை கடந்தது
இந்தியாவில் முதல் முறையாக கொரோனா ஒருநாள் பாதிப்பு 9304 ஆக உயர்ந்து உள்ளது.
5. விரைவில் 2-ஆம் கட்ட மனித சோதனைகளுக்கு முன்னேறும் அமெரிக்க கொரோனா தடுப்பூசி
அமெரிக்காவின் புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி விரைவில் 2 ஆம் கட்ட மனித சோதனைகளுக்கு முன்னேறுகிறது.