தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 694 ஆக உயர்வு + "||" + Corona casualty death toll rises to 694

மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 694 ஆக உயர்வு

மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 694 ஆக உயர்வு
மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 694 ஆக உயர்வடைந்து உள்ளது.
புனே,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிர பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.  நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.  எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.  பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

நாட்டில் அதிக அளவாக மராட்டியத்தில் 17,974 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 43 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 651ல் இருந்து 694 ஆக உயர்ந்து உள்ளது.  3 ஆயிரத்து 301 பேர் பாதிப்பில் இருந்து விடுபட்ட நிலையில் வீடு திரும்பி உள்ளனர்.

கோவாவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 7 பேரும் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.  இதனால் கொரோனாவில் இருந்து முழு அளவில் விடுபட்ட நிலையை கோவா அடைந்துள்ளது.  இதனை தொடர்ந்து மணிப்பூர், அருணாசல பிரதேசம் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் (33) ஆகியவையும் கொரோனா பாதிப்பில் இருந்து முழுவதும் விடுபட்டு உள்ளன.  தமிழகத்தில் 5,409 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.  1,547 பேர் சிகிச்சை முடிந்து திரும்பி சென்றுள்ளனர்.  இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா சிகிச்சை : இந்தியாவிடம் உதவியை எதிர்பார்க்கும் பிரான்ஸ்
கொரோனா பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து கிடைப்பதில், இந்தியாவின் ஒத்துழைப்பை பிரான்ஸ் எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
2. சென்னையில் இருந்து பர்கூர் வந்த தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா
சென்னையில் இருந்து பர்கூருக்கு வந்த தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தை சேர்ந்த மேலும் 3 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
3. கொரோனா பாதித்த பகுதியில் நாராயணசாமி ஆய்வு
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
4. 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் ; அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எச்சரிக்கை
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
5. தென்திருப்பேரையில் கொரோனா பாதிப்பு: சுகாதார பணிகளை கலெக்டர் ஆய்வு
தென்திருப்பேரையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.