மாநில செய்திகள்

சென்னையில் அதிரடி காட்டும் கொரோனா; ஒரே தெருவில் 8 பேருக்கு பாதிப்பு உறுதி + "||" + Corona in Action in Chennai; 8 people affected on the same street

சென்னையில் அதிரடி காட்டும் கொரோனா; ஒரே தெருவில் 8 பேருக்கு பாதிப்பு உறுதி

சென்னையில் அதிரடி காட்டும் கொரோனா; ஒரே தெருவில் 8 பேருக்கு பாதிப்பு உறுதி
சென்னையில் ஒரே தெருவை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் பரவல் தீவிரமடைந்து உள்ளது.  அரசு தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.  இதற்கு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களில் 3 பேர் உள்பட 4 பேர் இன்று பலியாகி உள்ளனர்.  இதனால், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து உள்ளது.  தமிழகத்தில் மிக அதிக அளவாக சென்னையில் பாதிப்பு உள்ளது.

சென்னை பெரியமேட்டில் ஒரே தெருவை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இவர்களில் 7 பெண்கள் மற்றும் ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.  இதனை தொடர்ந்து அந்த தெரு முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லையில் உயரும் கொரோனா பாதிப்பு; 32 பேருக்கு உறுதி
நெல்லையில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. தமிழகத்தில் ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. தமிழகத்தில் ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. புயல் பாதிப்பு; மேற்கு வங்காளத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்: பிரதமர் மோடி உறுதி
புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்து உள்ளார்.
5. தமிழகத்தில் ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.