மாநில செய்திகள்

சென்னை காவல் துறையில் கொரோனா உறுதி எண்ணிக்கை 60 ஆக உயர்வு + "||" + Coronation confirmation in Chennai Police increased to 60

சென்னை காவல் துறையில் கொரோனா உறுதி எண்ணிக்கை 60 ஆக உயர்வு

சென்னை காவல் துறையில் கொரோனா உறுதி எண்ணிக்கை 60 ஆக உயர்வு
சென்னை காவல் துறையில் கூடுதலாக 4 பேருக்கு இன்று கொரோனா உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 60 ஆக உயர்வடைந்து உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பரவல் தீவிரமடைந்து உள்ளது.  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.  அரசு தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.  இதற்கு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

எனினும், பொதுமக்களில் பலர் ஊரடங்கு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது.  சென்னையில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்ட 4 நாட்களில் மக்கள் சந்தைகளில் அதிக அளவில் குவிந்து விதிகளை காற்றில் பறக்க விட்டனர்.  இதனால் சென்னையில் பாதிப்பு அதிகரித்து உள்ளது.

அவர்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்த மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோருக்கும் சமீபத்தில் தொற்று பரவி வருகிறது.  சென்னையில் வேப்பேரி தீயணைப்பு நிலையத்தில் கூடுதலாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் வேப்பேரி தீயணைப்பு நிலையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது.

இதனை தொடர்ந்து சென்னை காவல் துறையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆக உயர்வடைந்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் பலி
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் பலியாகி உள்ளனர்.
2. இந்தியாவில் கொரோனா பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 170 பேர் பலி
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 170 பேர் பலியாகி உள்ளனர்.
3. இந்தியாவில் கொரோனா பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 146 பேர் பலி
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 146 பேர் பலியாகி உள்ளனர்.
4. இந்தியாவில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 4,021 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 4,021 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.
5. இந்தியாவில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 3,867 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 3,867 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.