மாநில செய்திகள்

ஊரடங்கு மீறல்; தமிழகத்தில் ரூ.4.60 கோடி அபராதம் வசூல் + "||" + Curfew violation; Rs.4.60 crores fine in Tamil Nadu

ஊரடங்கு மீறல்; தமிழகத்தில் ரூ.4.60 கோடி அபராதம் வசூல்

ஊரடங்கு மீறல்; தமிழகத்தில் ரூ.4.60 கோடி அபராதம் வசூல்
தமிழகத்தில் ஊரடங்கு மீறலில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.4.60 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்த உத்தரவு வரும் மே 17ந்தேதி வரை அமலில் இருக்கும்.  தமிழகத்தில் 144 தடை உத்தரவும் அமலில் உள்ளது.  எனினும், கடந்த 4ந்தேதி முதல் ஊரடங்கு தளர்வு அமலானது.  மக்கள் ஊரடங்கை மீறி சில இடங்களில் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

அத்தகைய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாகனங்களில் சுற்றினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், 144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 37 ஆயிரத்து 61 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.  ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4 லட்சத்து 12 ஆயிரத்து 215 வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 62 ஆயிரத்து 36 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  இதுவரை ரூ.4 கோடியே 60 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.  பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை கடந்த ஏப்ரல் 16ந்தேதி முதல் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் ஊரடங்கு மீறல்: ரூ.8.09 கோடி அபராதம் வசூல்
தமிழகத்தில் ஊரடங்கு மீறலில் ஈடுபட்டோரிடம் இருந்து ரூ.8.09 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.
2. தமிழகத்தில் ஊரடங்கு மீறல்: ரூ.7.63 கோடி அபராதம் வசூல்
தமிழகத்தில் ஊரடங்கு மீறலில் ஈடுபட்டோரிடம் இருந்து ரூ.7.63 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.
3. தமிழகத்தில் ஊரடங்கு மீறல்; ரூ.3.76 கோடி அபராதம் விதிப்பு
தமிழகத்தில் ஊரடங்கு மீறலில் ஈடுபட்ட நபர்களுக்கு ரூ.3.76 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
4. தமிழகத்தில் ஊரடங்கு மீறல்; ரூ.3.54 கோடி அபராதம் விதிப்பு
தமிழகத்தில் ஊரடங்கு மீறலில் ஈடுபட்ட நபர்களுக்கு ரூ.3.54 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
5. ஊரடங்கு மீறல் சென்னையில் 40 ஆயிரம் வழக்குகள் பதிவு - தமிழகத்தில் கைது எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரமாக உயர்வு
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1 லட்சத்து 42 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் அது தொடர்பாக 40 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.