தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை முறையை சோதனை முறையில் வழங்க ஐசிஎம்ஆர் அனுமதி + "||" + Plasma therapy: ICMR allows 21 institutions for participating in clinical trials to contain COVID-19

நாடு முழுவதும் 21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை முறையை சோதனை முறையில் வழங்க ஐசிஎம்ஆர் அனுமதி

நாடு முழுவதும் 21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை முறையை சோதனை முறையில் வழங்க ஐசிஎம்ஆர் அனுமதி
நாடு முழுவதும் 21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை முறையை சோதனை முறையில் வழங்க ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கியுள்ளது.
புதுடெல்லி,

வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் உடலில் அந்த தொற்றினை அழிக்கும் எதிரணுக்கள் உருவாகியிருக்கும். அவர்களது ரத்தத்தில் இருந்து எதிரணுக்களை பிரித் தெடுத்து,நோயாளிகளின் உடலில் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

பிளாஸ்மா என்றழைக்கப்படும் இந்த சிகிச்சை முறை நல்ல பலன் அளிக்கிறது என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் தெரிவித்து இருந்தனர். 

எனினும், பிளாஸ்மா சிகிச்சைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்  முறையாக அனுமதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில், கொரோனா சிகிச்சைக்கு சோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் இருந்து வந்த கொடுமுடியை சேர்ந்தவருக்கு கொரோனா
மராட்டியத்தில் இருந்து வந்த கொடுமுடியை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
2. சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்
புதுச்சேரியில் மேலும் ஒரு சிறுவனுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. சுகாதாரத்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
4. கொரோனாவை வைத்து ஆளும் அரசு அரசியல் செய்கிறது - டி.கே.எஸ். இளங்கோவன்
கொரோனாவை வைத்து ஆளும் அரசு அரசியல் செய்கிறது என்று டி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
5. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது.