தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று - மத்திய சுகாதாரத்துறை + "||" + oday, when we are talking of relaxations and return of migrant workers, we have to understand that we also have to learn to live with the virus.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று - மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று - மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் தெரிவித்தார்.

புதுடெல்லி,

மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர்  லாவ் அகர்வால் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 1273 பேர் கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்துள்ளனர்.

 இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 29.36 சதவிகிதமாக உள்ளது. தற்போது வரை 16,540  பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.  கொரோனா பாதிப்புக்காக 37,916 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

தளர்வுகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்புவது பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், கொரோனா வைரசுடன் நாம் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.  கொரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகளை நாம் வாழ்க்கை முறை மாற்றங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றார் 

தொடர்புடைய செய்திகள்

1. வெளிமாநில தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் - ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்
வெளிமாநில தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
2. சொந்த ஊர்களுக்கு வெளிமாநில தொழிலாளர்கள் நடந்து செல்ல அனுமதிக்கக்கூடாது - மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்வதை அனுமதிக்கக்கூடாது என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.
3. மே 3-ந் தேதிக்கு பிறகு வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல அனுமதிக்க வேண்டும் - ப.சிதம்பரம் கோரிக்கை
மே 3-ந் தேதிக்கு பிறகு வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
4. வெளி மாநில தொழிலாளர்கள் தங்கியிருக்கும் மாநிலங்களில் இருந்து வெளியேறக்கூடாது; உள்துறை அமைச்சகம்
வெளி மாநில தொழிலாளர்கள் தங்கியிருக்கும் மாநிலங்களில் இருந்து வெளியேறக்கூடாது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
5. “வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படுகிறது” - துணை போலீஸ் கமிஷனர் சரவணன் பேட்டி
“வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படுகிறது” என்று நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன் கூறினார்.