மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது + "||" + 600 more test positive for coronavirus in TN

தமிழகத்தில் மேலும் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது

தமிழகத்தில் மேலும்  600 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த பாதிப்பு  6 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6009-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தற்போது கோயம்பேடு மார்க்கெட் வழியாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் இடையே பெரிதும் கவலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது பெரும்பாலும் பாதிக்கப்படுகிறவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்பில் இருப்பவர்கள் தான்.

இதனால் பெரும்பாலான காய்கறி வணிகர்களுக்கு பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 22 மாவட்டங்களில், கொரோனா நோய் தொற்றால் 580 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  5 ஆயிரத்து 409 ஆக இருந்தது. 

இந்த நிலையில்,  இன்று மேலும் 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் , தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6009-ஆக உயர்ந்திருக்கிறது.கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்கு 52 ஆய்வகங்கள் உள்ளன. நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 13,980 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. மராட்டியத்தை விட அதிகபட்சமாக தமிழகத்தில்தான் 2,16,416 மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 0.68 சதவிகிதமாக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1605 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை.  சென்னையில் இன்று ஒரு நாளில் மட்டும் 399 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  சென்னையில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3,043 ஆக உயர்ந்துள்ளது. 

மேற்கண்ட தகவல்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில்   தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. தென்திருப்பேரையில் கொரோனா பாதிப்பு: சுகாதார பணிகளை கலெக்டர் ஆய்வு
தென்திருப்பேரையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.
2. ஈரோடு மாவட்ட கொரோனா பட்டியலில் மேலும் 2 பேர் சேர்ப்பு
ஈரோடு மாவட்ட கொரோனா பாதிப்பு பட்டியலில் மேலும் 2 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்கள் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வசித்து வருபவர்கள் ஆவர்.
3. கொரோனா பாதிப்பால்தான் செவிலியர் கண்காணிப்பாளர் உயிரிழந்தார்: டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் செவிலியர் கண்காணிப்பாளர் உயிரிழந்தார் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
4. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தீவிர கவனத்துடன் செயல்பட வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்
கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தீவிர கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.
5. சாதாரணமாக ஏற்படும் இருமலும், தும்மலும் கொரோனா பாதிப்பு அல்ல-டாக்டர்கள்
சாதாரணமாக ஏற்படும் அனைத்து இருமல், தும்மலும் கொரோனா அல்ல என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.