மாநில செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும்? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் + "||" + SSLC Exam When will the schedule be released? Minister Sengottaiyan's explanation

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும்? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும்? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும்? என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை, 

கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கி நடைபெற இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை தமிழக அரசு தள்ளிவைத்தது. இது தவிர பிளஸ்-1 பொதுத் தேர்வின் இறுதி நாள் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது.

தள்ளிவைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா? என்று பலரும் பேசி வந்த நிலையில், அந்த தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் பதில் அளித்தார். இருப்பினும், சில கல்வியாளர்கள், கல்வி சார்ந்த அமைப்புகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதற்கு மாற்றாக சில கருத்துகளையும் முன்வைத்து வருகின்றனர்.

இந்த குழப்பங்களின் மத்தியில் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இருப்பினும் தேர்வு எப்போது நடைபெறும்? என்பது குறித்து அரசு விளக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர் கோரிக்கையும் விடுக்கின்றனர்.

இதற்கிடையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று ஒரு தகவலை பதிவிட்டு இருந்தார். அதில் அவர், ‘எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு உறுதியாக நடைபெறும். உயர்மட்டக்குழு கூட்டத்துக்கு பின், ஜூன் மாத இறுதிக்கு பிறகு பொதுத்தேர்வு கால அட்டவணையை அறிவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு எப்போது நடக்கும்? என்று எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கும் தேர்வு குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. புதுவையிலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஜூன் 15-ந்தேதி தொடக்கம்; அமைச்சர் தகவல்
தமிழகத்தை பின்பற்றி புதுவையிலும் வரும் ஜூன் 15-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடங்குகின்றன. இதற்காக மாணவர்களுக்கு 200 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.
2. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தற்போதைக்கு நடத்தக்கூடாது - கன்னட வளர்ச்சி ஆணைய முன்னாள் தலைவர் வலியுறுத்தல்
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை இப்போதைக்கு நடத்தக் கூடாது என்று கன்னட வளர்ச்சி ஆணைய முன்னாள் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
3. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அறிவிப்பு: வெளிமாவட்டங்களுக்கு சென்ற 587 மாணவர்கள் நாளை திண்டுக்கல்லுக்கு வரும்படி அழைப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு சென்ற 587 எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் நாளை திண்டுக்கல்லுக்கு வரும்படி அழைக்கப்பட்டுள்ளனர்.
4. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கால அட்டவணை அறிவிப்பு - பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் அறிவிப்பு
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் அறிவித்துள்ளார். அதன்படி ஜூன் 25-ந் தேதி தேர்வு தொடங்குகிறது.
5. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தள்ளி வைக்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்
கொரோனா பரவும் பதற்றமான சூழல் நிலவுவதால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.