உலக செய்திகள்

அமெரிக்க துணை அதிபரின் பெண் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா உறுதி + "||" + US Vice President Mike Pence's spokeswoman to test positive for coronavirus

அமெரிக்க துணை அதிபரின் பெண் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா உறுதி

அமெரிக்க துணை அதிபரின் பெண் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா உறுதி
அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சின் பெண் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
வாஷிங்டன்,

அமெரிக்காவில் தீவிர அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா வைரசுக்கு இதுவரை 12.99 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  77 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து 2 லட்சத்து 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடு திரும்பியுள்ளனர்.  அந்நாட்டின் துணை அதிபராக இருந்து வருபவர் மைக் பென்ஸ்.  இவரது பெண் செய்தி தொடர்பாளராக இருந்து வருபவர் கேத்தி மில்லர்.

அதிபர் டொனால்டு டிரம்பின் தலைமை உதவியாளரான ஸ்டீபன் மில்லரின் மனைவியான கேத்திக்கு, கொரோனா பரிசோதனையில் தொற்று ஏற்பட்டது உறுதியானது.  கடந்த வியாழ கிழமை டிரம்ப் நடத்திய இறைவணக்க நிகழ்ச்சியில் கேத்தி கலந்து கொண்டார்.

இதில் டிரம்ப் மற்றும் பென்ஸ் ஆகியோரது மனைவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  2ம் உலக போர் நினைவு தின நிகழ்ச்சியில் முக கவசம் அணியாமல் டிரம்ப் பங்கேற்ற நிலையில் இந்த பரிசோதனை முடிவு வெளிவந்துள்ளது.  இந்த தகவலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அமெரிக்க துணை அதிபரின் பத்திரிகை செயலாளர்
அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சின் பத்திரிகை செயலாளர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு பணிக்கு திரும்பியுள்ளார்.
2. சீனாவின் உகான் நகரில் வசிக்கும் 1 கோடி பேருக்கும் கொரோனா பரிசோதனை
சீனாவின் உகான் நகரில் வசிக்கும் 1 கோடி பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
3. 5 காவலர்களுக்கு கொரோனா உறுதி; சென்னை மந்தைவெளி பறக்கும் ரெயில் நிலையம் மூடப்பட்டது
5 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை மந்தைவெளி பறக்கும் ரெயில் நிலையம் மூடப்பட்டு உள்ளது.
4. கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்ற 7 பேருக்கு கொரோனா உறுதி; நாளை முழு ஊரடங்கு அமல்
சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்ற 7 பேருக்கு கொரோனா உறுதியானதன் எதிரொலியாக நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
5. கோவையில் 2 பெண் காவலர்கள் உள்பட 3 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கோவையில் 2 பெண் காவலர்கள் உள்பட 3 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.