மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களில் மது விற்பனையில் ரூ.294 கோடி வசூல் + "||" + Rs 294 crore in liquor sales in 2 days in Tamil Nadu

தமிழகத்தில் 2 நாட்களில் மது விற்பனையில் ரூ.294 கோடி வசூல்

தமிழகத்தில் 2 நாட்களில் மது விற்பனையில் ரூ.294 கோடி வசூல்
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக டாஸ்மாக் மதுக்கடைகளில் நடந்த விற்பனையால் ரூ.294 கோடி அளவுக்கு வசூலாகியுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், கடந்த 4ந்தேதி முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.  இதனை தொடர்ந்து கடந்த 7ந்தேதி முதல் மது விற்பனைக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

எனினும், அதிக கொரோனா பாதிப்புகளை கொண்ட சென்னை நீங்கலாக, மற்ற மாவட்டங்களில் மது விற்பனை தொடங்கியது.  கடந்த 43 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டவுடன், கடைகளில் போட்டி போட்டு கொண்டு ஆண்கள், பெண்கள் வித்தியாசமின்றி பலர் குவிந்து விட்டனர்.

முதல் நாளில் ரூ.170 கோடிக்கு மது விற்பனை இருந்தது.  2வது நாளாக நேற்றும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.  இதில், 2வது நாளில் ரு.122 கோடி வசூல் ஆகியுள்ளது.  மதுரையில் அதிக அளவாக ரூ.32.45 கோடி வசூலாகியுள்ளது.  கடந்த 2 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் நடந்த மது விற்பனையால் ரூ.294 கோடி அளவுக்கு வசூலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. விலை உயர்வால் மது விற்பனை பாதியாக சரிந்தது
விலை உயர்வால் புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட 3-வது நாளான நேற்று மது விற்பனை பாதியாக சரிந்தது.
2. விலை உயர்வால் கடும் அதிருப்தி: புதுவையில் மது விற்பனை மந்தம்
விலை உயர்வால் புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட 2-வது நாளான நேற்று மது விற்பனை மந்தமாக இருந்தது. மது பிரியர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வராததால் கடை உரிமையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
3. புதுச்சேரியில் விலை உயர்வுடன் மது விற்பனை தொடங்கியது
புதுச்சேரியில் விலை உயர்வுடன் மது விற்பனை இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.
4. இன்று மதுவிற்பனை தொடக்கம்: டாஸ்மாக் கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
டாஸ்மாக் கடைகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் மது விற்பனை தொடங்க இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
5. மது விற்பனை மூலம் ரூ.2,350 கோடி வருமானம் ஈட்ட உத்தரபிரதேச அரசு முடிவு
உத்தரபிரதேசத்தில் சாதாரண வகை மதுபானம் முதல் பிரிமீயம் வகை மதுபானங்கள் வரை தரம் மற்றும் அளவை பொறுத்து ஒரு பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.400 வரை உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.