தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 731 ஆக உயர்வு + "||" + Corona casualty death toll rises to 731 in Maharashtra

மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 731 ஆக உயர்வு

மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 731 ஆக உயர்வு
மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 731 ஆக உயர்வடைந்து உள்ளது.
புனே,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது.  நாட்டில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.  எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.  பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

நாட்டில் அதிக அளவாக மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 17,974 பேரில் இருந்து 19,063 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 37 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 694ல் இருந்து 731 ஆக உயர்ந்து உள்ளது.  3 ஆயிரத்து 470 பேர் பாதிப்பில் இருந்து விடுபட்ட நிலையில் வீடு திரும்பி உள்ளனர்.

கோவாவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 7 பேரும் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.  இதனால் கொரோனாவில் இருந்து முழு அளவில் விடுபட்ட நிலையை கோவா அடைந்துள்ளது.  கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று இல்லாத நிலையில் கோவா நீடித்து வருகிறது.

இதனை தொடர்ந்து மணிப்பூர் (2 பேர்), அருணாசல பிரதேசம் (ஒருவர்) மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் (33 பேர்) ஆகியவையும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு முழு அளவில் விடுபட்டு உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் முழுவதும் சிறைகளில் உள்ள 39 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு
தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் 39 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது மந்திரி பேச்சு-பெண்கள் அமைப்புகள் கண்டனம்
கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது என இந்தோனேசிய மந்திரியின் பேச்சுக்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
3. இந்தியாவில் கொரோனா பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் பலி
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் பலியாகி உள்ளனர்.
4. கொரோனா பாதிப்பு; சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் பலி
சென்னையில் பணி நீட்டிப்பு செய்யப்பட்ட ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளார்.
5. இந்தியாவில் கொரோனா பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 170 பேர் பலி
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 170 பேர் பலியாகி உள்ளனர்.