மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா தொற்றுக்கு மாநகராட்சி சுகாதார பணியாளர் உயிரிழப்பு + "||" + Municipal health worker dies of coronary infection in Chennai

சென்னையில் கொரோனா தொற்றுக்கு மாநகராட்சி சுகாதார பணியாளர் உயிரிழப்பு

சென்னையில் கொரோனா தொற்றுக்கு மாநகராட்சி சுகாதார பணியாளர் உயிரிழப்பு
சென்னையில் கொரோனா தொற்றுக்கு மாநகராட்சி சுகாதார பணியாளர் உயிரிழந்து உள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் பரவலை, கட்டுப்படுத்தும் மற்றும் தடுப்பு பணிகளில் அரசு போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டுள்ளது.  ஊரடங்கு அமலில் உள்ளபோதும், மக்கள் ஒத்துழைப்பு அவசியம் என அரசு தொடர்ந்து கூறி வருகிறது.  தமிழகத்தில் நேற்று வரை 40 பேர் பலியாகி இருந்தனர்.

சென்னையில் இன்று கூடுதலாக 2 பெண்கள் பலியாகி உள்ளனர்.  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 64 வயது மூதாட்டி ஒருவர் மரணம் அடைந்து உள்ளார்.  இவர் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர்.  இதேபோன்று வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 56 வயது பெண் ஒருவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

இதனால், சென்னையில் கொரோனா பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது.  தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வடைந்தது.

இந்நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனா தொற்றுக்காக நபர் ஒருவர் சேர்க்கப்பட்டார்.  தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்து உள்ளார்.  45 வயதுடைய அவர், சென்னை தேனாம்பேட்டை மண்டலத்தில் மாநகராட்சி சுகாதார பணியாளராக கடந்த 7 வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார்.  இதனால் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை சென்னையில் 27 ஆகவும், தமிழகத்தில் 43 ஆகவும் உயர்வடைந்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சேலத்தில் டாக்டர் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சேலத்தில் டாக்டர் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. நாமக்கல் மாவட்டத்தில் மேலும் ஒரு கர்ப்பிணிக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 83 ஆக உயர்வு
நாமக்கல் மாவட்டத்தில் மேலும் ஒரு கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 83 ஆக உயர்ந்து உள்ளது.
3. முதியவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் பாதுகாக்க வேண்டும்; சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் பேட்டி
முதியவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் பாதுகாக்க வேண்டும் என்று அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜி நாதன் தெரிவித்தார்.
4. புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு
புதுச்சேரியில் புதிதாக 6 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
5. சேலத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு
சேலத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.