மாநில செய்திகள்

டீக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை செயல்படும் - பார்சல்களுக்கு மட்டும் அனுமதி-தமிழக அரசு + "||" + Tea shop will operate from 6 am to 7 pm - only for Parcels - Tamil Nadu Government

டீக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை செயல்படும் - பார்சல்களுக்கு மட்டும் அனுமதி-தமிழக அரசு

டீக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை செயல்படும் - பார்சல்களுக்கு மட்டும் அனுமதி-தமிழக அரசு
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் டீ கடைகளை திறக்க அனுமதி கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது

சென்னை,

ஊரடங்கில் சில தளர்வுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில், மேலும் சில தள்ரவுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதன்படி, சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மளிகை, காய்கறி கடைகள் விற்பனை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை விற்பனை செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

* சென்னையை தவிர தமிழகம் முழுவதும் டீக்கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  டீக்கடைகளில் பார்சல் மட்டுமே வழங்கப்படும், நின்றோ உட்கார்ந்தோ டீ அருந்தக்கூடாது. நிபந்தனைகளை மீறினால் உடனடியாக டீக்கடைகள் மூடப்படும்

*சென்னையில் தனியார் நிறுவனங்கள் 33 சதவித பணியாளர்களுடன் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம் எனவும் பிற பகுதிகளில்  காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம்,

பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படலாம்.  

இந்த புதிய தளர்வுகள் அனைத்தும் வரும் 11 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று  தமிழக அரசு தெரிவித்துள்ளது.   ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும், தடைகளும் மறு உத்தரவு வரும்வரை தொடரும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. சிறப்பு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் கலந்துகொள்வதற்காக 49 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு - தமிழக அரசு
சிறப்பு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் கலந்துகொள்வதற்காக 49 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2. சென்னை மாநகராட்சி தவிர மற்ற நகர்ப்புற பகுதிகளில் சலூன் கடைகள் இயங்க அனுமதி
நகர்புற பகுதிகளிலும் சலூன் கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
3. தமிழக அரசின் சிக்கன நடவடிக்கைகள்!
தமிழக அரசின் பல சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
4. புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்- மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்
புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
5. 50 சதவீத ஊழியர்களுடன் 18ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் - தமிழக அரசு
மே.18 முதல் அரசு அலுவலகங்கள் 50 % ஊழியர்களுடன் செயல்படலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.