மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 526 பேருக்கு கொரோனா தொற்று- சுகாதாரத்துறை + "||" + Corona Virus 526 new cases in Tamil Nadu

தமிழகத்தில் மேலும் 526 பேருக்கு கொரோனா தொற்று- சுகாதாரத்துறை

தமிழகத்தில் மேலும் 526 பேருக்கு கொரோனா தொற்று-  சுகாதாரத்துறை
தமிழகத்தில் மேலும் 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.  எனினும், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தபாடில்லை.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா நோய் தொற்றால் 600 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் சென்னையில் மட்டும் 399 பேர்  அடங்குவர். நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில்  கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 9 ஆக இருந்தது. 

இந்த நிலையில்,  தமிழகத்தில் மேலும் 526 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,525-ஆக உயர்ந்திருக்கிறது.  சென்னையில் மட்டும் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னை இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3330 ஆக உள்ளது.  கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 219 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 59 ஆயிரத்தை தாண்டியது
பாகிஸ்தானில் கொரோனா தொற்றின் பாதிப்பு 59 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
2. கேரளாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு: முதல்-மந்திரி பினராயி விஜயன்
கேரளாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
3. கொரோனா பாதித்தவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தருவது நிறுத்தம்: உலக சுகாதார நிறுவனம் அதிரடி முடிவு
கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தந்து சோதிப்பதை நிறுத்தி வைத்து உலக சுகாதார நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
4. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,45,380 ஆக உயர்வு: பலி எண்ணிக்கை 4,167 ஆனது
இந்தியாவில் தொடர்ந்து 5-வது நாளாக 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆகவும், பலி எண்ணிக்கை 4,167 ஆகவும் உயர்ந்துள்ளது.
5. கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதனை: அமெரிக்க நிறுவனம் நடவடிக்கை
கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதனை செய்ய அமெரிக்க நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.