தேசிய செய்திகள்

“குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவியாக அமையும்” - நிர்மலா சீதாராமன் அறிவிப்புக்கு மோடி வரவேற்பு + "||" + Modi welcomes announcement of Nirmala Sitharaman

“குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவியாக அமையும்” - நிர்மலா சீதாராமன் அறிவிப்புக்கு மோடி வரவேற்பு

“குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவியாக அமையும்” - நிர்மலா சீதாராமன் அறிவிப்புக்கு மோடி வரவேற்பு
கொரோனா வைரசால் பாதித்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகளை பிரதமர் மோடி வரவேற்றார். இது குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவியாக அமையும் என அவர் குறிப்பிட்டார்.
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியால், இந்திய பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி சலுகை திட்டங்களை செயல்படுத்தும் என பிரதமர் மோடி நேற்று முன்தினம் டெலிவிஷனில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது குறிப்பிட்டார்.

அந்த வகையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், டெல்லியில் நேற்று இது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் சிலவற்றை வெளியிட்டார்.

அப்போது அவர் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பிணையின்றி ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிடடார். இதனைக்கொண்டு 45 லட்சம் சிறுதொழில் நிறுவனங்கள் பலன் அடைய முடியும் எனவும் அவர் கூறினார்.

நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்பை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.

இதையொட்டி அவர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள், தொழில் நிறுவனங்கள் குறிப்பாக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதில் நீண்ட தொலைவுக்கு செல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் இருந்து செல்லும் விமானங்களுக்கு தடை; கொல்கத்தா விமான நிலையம் அறிவிப்பு
சென்னையில் இருந்து வருகிற 19ந்தேதி வரை விமானங்கள் வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது என கொல்கத்தா விமான நிலையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2. சாத்தான்குளம் வியாபாரி-மகன் உயிரிழந்த சம்பவம் சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சாத்தான்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்ட வியாபாரியும், அவரது மகனும் உயிரிழந்த சம்பவம்பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
3. வங்காளதேச கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் ஒத்தி வைப்பு; ஐ.சி.சி. அறிவிப்பு
வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் அடுத்த மாதம் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்படுகிறது என்று ஐ.சி.சி. அறிவித்து உள்ளது.
4. முகபாகங்களை பிரதிபலிக்கும் வகையிலான முக கவசங்கள்; பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு
கோவையில் நமது முகங்களை உள்ளபடியே பிரதிபலிக்கும் வகையில் தயாராகும் முக கவசங்களை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
5. 10ம் வகுப்பு மாணவர்கள் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி; தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு
10ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் தேர்ச்சி செய்யப்படுவர் என தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.