தேசிய செய்திகள்

கொரோனா வைரசுடன் வாழும் கலையை நாம் கற்று கொள்ள வேண்டும் - மத்திய மந்திரி + "||" + We have to understand the art of living with corona-Nitin Gadkari

கொரோனா வைரசுடன் வாழும் கலையை நாம் கற்று கொள்ள வேண்டும் - மத்திய மந்திரி

கொரோனா வைரசுடன் வாழும் கலையை நாம் கற்று கொள்ள வேண்டும் - மத்திய மந்திரி
கொரோனா வைரசுடன் வாழும் கலையை நாம் கற்று கொள்ள வேண்டும் என மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறி உள்ளார்.
புதுடெல்லி

சீனாவில் உகான் நகரில் உருவாகி உலகமெங்கும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில்  கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த தொற்று, 43 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதித்து உள்ளதாகவும், 2 லட்சத்து 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்றுள்ளதாகவும் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் தொற்று தரவு மையம் கூறுகிறது.

இந்த கொடிய வைரஸ் இயற்கையாக உருவானதா, உகான் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டதா என்பதில் பெருத்த சர்ச்சை நிலவுகிறது.

ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது, அங்கிருந்து கசிந்துதான் உலகமெங்கும் பரவிவிட்டது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டி வருகிறது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் உகான் ஆய்வுக்கூடத்தில் உருவானது அல்ல, இயற்கையாக உருவானதுதான் என்று சீன விஞ்ஞானிகள் புதிய ஆதாரத்தை காட்டுகின்றனர்.

இந்த விஞ்ஞானிகள், வவ்வால்களில் சார்ஸ் கோவ்-2-வின் நெருங்கிய உறவு வைரசை (ஆர்எம்ஒய்என்-02) அடையாளம் கண்டுள்ளனர். இதுதான், கோவிட்-19 என்று அழைக்கப்படுகிற கொரோனா வைரஸ் ஆய்வுக்கூடத்தில் உருவாக்காமல் இயற்கையாக உருவானதற்கு ஆதாரம் என்று ஆராய்ச்சி நடத்தியுள்ள ஷான்டாங் முதல் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் தனியார் டெலிவிஷன் ஒன்றுக்கு பேட்டி அளித்த மத்திய மந்திரி நிதின் கட்காரி இது ஒரு இயற்கை வைரஸ் அல்ல. இது ஒரு செயற்கை வைரஸ் என கூறினார்.

அவர் கூறியதாவது;-

கொரோனா வைரசுடன் வாழும் கலையை நாம் கற்று கொள்ள வேண்டும். இது ஒரு இயற்கை வைரஸ் அல்ல. இது  ஆய்வகத்தில் உருவான ஒரு செயற்கை வைரஸ்.  இப்போது உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகள் தடுப்பூசிக்காக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். தடுப்பூசி கிடைக்கவில்லை,  தடுப்பூசி விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பின்னர் எந்த பிரச்சினையும் இருக்காது 

உலகம் இப்போது தயாராக உள்ளது, இந்திய விஞ்ஞானிகள் தயாராக உள்ளனர். அதற்கான தீர்வைக் கண்டுபிடித்த பிறகு, நாம் நம்பிக்கையை உருவாக்க முடியும். ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் பிறகு எந்த பிரச்சினையும் இருக்காது,

நாடு தழுவிய கொரோனா வைரஸ் ஊரடங்கால் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அச்சம் காரணமாக வெளியேறினர், வணிகங்கள் மீண்டும் திறக்கப்படும் போது அவர்கள் திரும்பி வருவார்கள்.நாம் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட வேண்டும், ஆனால் நாம் ஒரு பொருளாதார யுத்தத்தையும் எதிர்த்துப் போராட  வேண்டும். நாம் ஒரு ஏழை நாடு, ஊரடங்கை ஒரு மாதத்திற்கு மேல் அதிகரிக்க முடியாது," என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசிகள் பலன் தராமல் போக வாய்ப்புகள் அதிகம் - ரஷிய விஞ்ஞானி எச்சரிக்கை
தாமாகவே இருமுறை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி ஆய்வு மேற்கொண்ட ரஷிய விஞ்ஞானி ஒருவர், தடுப்பூசிகள் பலன் தராமல் போக வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,404 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
3. கொரோனா மரண பயம் : சீனாவில் இருந்து ரகசியமாக தடுப்பூசி வரவழைத்து போட்டுக்கொண்ட வட கொரிய தலைவர்
கொரோனா பரவலால் மரண பயம் காரணமாக சீனாவில் இருந்து ரகசியமாக தடுப்பூசி வரவழைத்து வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் போட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
4. கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகும் நுரையீரல் பாதிப்பு இருக்கும் - ஆய்வில் தகவல்
கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகும் நுரையீரல் பாதிப்பு இருப்பது ஆய்வில் தெரியவந்து உள்ளது.
5. தமிழகத்தில் 11-வது ஊரடங்கு தளர்வுகளுடன் இன்று தொடக்கம்: அனைத்து கல்லூரிகளில் இறுதியாண்டு வகுப்புகளை 7-ந் தேதி முதல் நடத்த அனுமதி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் 11-வது ஊரடங்கு தளர்வுகளுடன் இன்று தொடங்குகிறது. அனைத்து கல்லூரிகளிலும் இறுதியாண்டு வகுப்புகளை 7-ந் தேதி முதல் நடத்த அனுமதி அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.