உலக செய்திகள்

இரண்டு வாரங்களில் லண்டனில் கொரோனாவே இல்லாத நிலை உருவாகும்!!! + "||" + London virus-free in TWO WEEKS

இரண்டு வாரங்களில் லண்டனில் கொரோனாவே இல்லாத நிலை உருவாகும்!!!

இரண்டு வாரங்களில் லண்டனில் கொரோனாவே இல்லாத நிலை உருவாகும்!!!
லண்டனில் ஒரு நாளில் 24 பேருக்கும் குறைவானவர்களே கொரோனா தொற்றுக்கு ஆளாவதால் இன்னும் சில வாரங்களில் கொரோனா ஒழிக்கப்பட்டுவிடும் என புதிய புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.
லண்டன்

ஒரு காலகட்டத்தில் இங்கிலாந்திலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த நகரம் லண்டன் , இன்று மற்ற பகுதிகளை விட ஜூன் மாதத்திற்குள் கொரோனாவே இல்லாத நிலையை எட்ட இருக்கிறது.

ஊரடங்கு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே பொது போக்குவரத்தில் சமூக விலகல் கட்டுப்பாடுகளை பின்பற்றியதால் மற்ற நகரங்களைவிட லண்டன் விரைவாக கொரோனாவிலிருந்து விடுபட்டு வருவதாக நம்பப்படுகிறது.

லண்டனைப் பொருத்தவரை மார்ச் 23 இல் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 213,000ஆக இருந்தது, இரண்டு வார ஊரடங்கிற்குப் பின் ஏப்ரல் 7 அன்று 10,000 ஆக சரிந்தது. லண்டனிலுள்ள சுமார் 15 சதவிகிதம் பேர் ஏற்கனவே நோய்த்தொற்றுக்கு ஆளாகிவிட்டதால், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிட்டது, எனவே மீண்டும் வைரஸ் பரவுவது கடினம் என்கிறார்கள் நிபுணர்கள்.

பெரும்பாலானோர் வீடுகளில் இருந்த வண்ணம் வேலை பார்க்க தொடங்கினர் அவர்களால் வீடுகளில் இருந்தவண்ணமே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள முடிந்ததும் கொரோனா பரவாமல் தடுக்கப்பட்டதற்கு இன்னொரு காரணமாக கருதப்படுகிறது. இன்னும் இரண்டு வாரங்களில் லண்டனில் கொரோனாவே இல்லாத நிலை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவில் இருந்து தப்பிப்பதை விட நீங்கள் லாட்டரியை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் -உலக சுகாதார நிபுணர்
அதிர்ஷ்டம் பாதுகாக்காது: உலகில் 200ல் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
2. பொறையாறு அருகே 42 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளை போனது: 3 சாமி சிலைகள் லண்டனில் மீட்பு
பொறையாறு அருகே உள்ள அனந்தமங்கலம் கோவிலில் இருந்த 3 சாமி சிலைகள் லண்டனில் மீட்கப்பட்டது. இந்த சிலைகள் விரைவில் இந்தியா கொண்டு வரப்படுகிறது.
3. 3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் - டொனால்டு டிரம்ப்
இன்னும் 3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உறுதியாக அறிவித்துள்ளார்.
4. கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் மாவட்டம் வாரியாக விவரம்
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் மாவட்டம் வாரியாக விவரம் வெளியாகி உள்ளது.
5. புலம்பெயர்ந்தோர் இறப்பு குறித்து தரவு எதுவும் இல்லை: பின்னடைவுக்கு பிறகு மத்திய அரசு விளக்க அறிக்கை
புலம்பெயர்ந்தோர் இறப்பு குறித்து "தரவு எதுவும் இல்லை" என கூறிய மத்திய அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து புலம்பெயர்ந்தோர் இறப்பு குறித்த அரசாங்கத்தின் தெளிவு படுத்தும் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...