உலக செய்திகள்

அமெரிக்காவில் சோதனை தொடங்குகிறது - கொரோனா தொற்றுக்கு மலேரியா மருந்து + "||" + Testing begins in the United States - malaria drug for coronavirus infection

அமெரிக்காவில் சோதனை தொடங்குகிறது - கொரோனா தொற்றுக்கு மலேரியா மருந்து

அமெரிக்காவில் சோதனை தொடங்குகிறது - கொரோனா தொற்றுக்கு மலேரியா மருந்து
அமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதியாகி, காய்ச்சல், இருமல், சுவாச பிரச்சினை உள்ளவர்களுக்கு மலேரியா மருந்து கொடுத்து சோதிக்கப்பட உள்ளது.
வாஷிங்டன், 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மலேரியா மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை தரலாம் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருத்து தெரிவித்தார்.

ஆனால் அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் தடுப்பு நிறுவனத்தின் தலைவர் அந்தோணி பாசி, கொரோனா உள்ளவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மற்றும் அஜித்ரோமைசின் பயன் தரக்கூடும் என சான்றுகள் இருந்தாலும், இதனை தீர்மானிக்க பெரிய அளவில் சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்று கருதுகிறார்.

அந்த வகையில் கொரோனா தொற்று உறுதியாகி, காய்ச்சல், இருமல், சுவாச பிரச்சினை உள்ளவர்களுக்கு கொடுத்து சோதிக்கப்பட உள்ளது. இதற்காக 2 ஆயிரம் பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு குறுகிய காலத்துக்கு மலேரியா மருந்து தரப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் ஒரே நாளில் மேலும் 43,742 பேருக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்காவில் ஒரே நாளில் மேலும் 43,742 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. அமெரிக்க வரலாற்றை அழிக்க முயற்சி: டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு
போராட்டம் என்ற பெயரில் அமெரிக்க வரலாற்றை அழிக்க முயற்சி நடப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
3. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகம்மது குரோஷிக்கு கொரோனா
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகம்மது குரோஷிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. பெங்களூருவில் 2 மணி நேரமாக தெருவோரம் வைக்கப்பட்டிருந்த கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம்
கொரோனா பாதிக்கப்பட்டவர் ஒருவர் வீட்டிலையே உயிரிழந்ததை தொடர்ந்து, உடலை தெருவோரம் வைத்தபடி 2 மணி நேரமாக அந்த குடும்பத்தினர் அம்புலன்ஸூக்கு காத்திருந்துள்ளனர்.
5. மதுராந்தகத்தில் கொரோனா பாதிப்பால் அரசு மருத்துவர் உயிரிழப்பு
மதுராந்தகத்தில் அரசு மருத்துவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.