உலக செய்திகள்

2 மாதங்களுக்கு பிறகு இத்தாலியில் பயணத் தடை நீக்கம் + "||" + Coronavirus: Italy to lift travel restrictions as lockdown eases

2 மாதங்களுக்கு பிறகு இத்தாலியில் பயணத் தடை நீக்கம்

2 மாதங்களுக்கு பிறகு இத்தாலியில் பயணத் தடை நீக்கம்
2 மாதங்களுக்கு பிறகு இத்தாலியில் பயணத் தடை நீக்கப்படுள்ளது.
ரோம், 

சீனாவில் உருவான உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் பிற நாடுகளுக்கு பரவ தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் ஐரோப்பிய நாடான இத்தாலி மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டது. அங்கு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இத்தாலிதான் முதன் முதலில் நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியது.

இந்தநிலையில் இத்தாலியில் தற்போது கொரோனா வைரசின் தீவிரம் குறைந்திருக்கிறது. இதனால் அந்த நாட்டு அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. அந்த வகையில் ஜூன் மாதம் 3-ந்தேதி முதல் சர்வதேச பயணத்தை அனுமதிக்க இத்தாலி அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. அதே நாளில் உள்நாட்டிலும் பயணங் கள் மேற்கொள்ள மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2 மாதங்களுக்கு பிறகு நாட்டில் பயண தடை நீங்க உள்ளதற்கு இத்தாலி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். முன்னதாக, கடந்த 4-ந்தேதி முதல் இத்தாலியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு பூங்காக்கள், உணவு நிலையங்கள், விடுதிகள், தொழிற்சாலைகள் ஆகியவை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் தானே பலவீனமடைந்து வருகிறதா...? ஆராய்ச்சியாளர்கள் இடையே கடும் விவாதம்...
கொரோனா வைரஸ் தன்னை பலவீனப்படுத்தி முடிவுக்கு வந்துவிடுமா என்பது குறித்த விவாதம் எழுந்து உள்ளது.
2. சீரி ஏ லீக் போட்டி ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கும்
சீரி ஏ லீக் போட்டி ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கும் என இத்தாலியின் கால்பந்து கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.
3. கொரோனா பாதிப்பில் இத்தாலி, இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளியது ரஷியா
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் 5-வது இடத்தில் இருந்த ரஷியா, நேற்று இத்தாலி மற்றும் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்துக்கு நகர்ந்தது.
4. கொரோனா பாதிப்புகளில் இத்தாலியை பின்னுக்கு தள்ளிய இங்கிலாந்து
கொரோனா பாதித்த ஐரோப்பிய நாடுகளில், இத்தாலியை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது.
5. கொரோனா ஊரடங்கால் இத்தாலியில் விநோதம்: வீடு வீடாகச் சென்று ஏழைகளுக்கு மாபியா கும்பல் உணவு வினியோகம்
உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான இத்தாலி, இப்போது கொரோனா நோயால் சிக்கி சின்னா பின்னாமாகிக் கிடக்கிறது.