உலக செய்திகள்

ஒபாமா முற்றிலும் திறமையற்றவர் - டிரம்ப் விமர்சனம் + "||" + Obama is totally incompetent - Trump criticism

ஒபாமா முற்றிலும் திறமையற்றவர் - டிரம்ப் விமர்சனம்

ஒபாமா முற்றிலும் திறமையற்றவர் - டிரம்ப் விமர்சனம்
ஒபாமா முற்றிலும் திறமையற்றவர் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விமர்சித்துள்ளார்.
வாஷிங்டன், 

கொரோனா வைரஸ் பாதிப்பில் உலகிலேயே அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. அங்கு நேற்று மதிய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 28 ஆயிரத்தை கடந்திருந்தது. அதே போல் கொரோனா பலி எண்ணிக்கை 90 ஆயிரத்து 980 ஆக இருந்தது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும், கொரோனா தடுப்பில் டிரம்பின் செயல்பாடுகளை குறைகூறி வருகிறார்.

அண்மையில் கல்லூரி பட்டதாரிகளுடன் காணொலி மூலம் உரையாடிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, கொரோனா வைரஸ் அமெரிக்கா தலைமையின் நிர்வாகத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டதாக தெரிவித்திருந்தார். அத்துடன் இங்கு கொரோனா தொற்றை தவிர எதுவும் இல்லை என்றும், அதிகாரிகள் எல்லாரும் என்ன செய்கிறார்கள் என்பதை கொரோனா வந்து காட்டிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்களின் சந்திப்பின் போது ஒபாமாவின் விமர்சனம் குறித்து, டிரம்பிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய டிரம்ப், “ஒபாமா ஒரு திறமையற்ற ஜனாதிபதியாக இருந்தார். முற்றிலும் திறமையற்றவர். அவ்வளவு தான் சொல்வதற்கு வேறில்லை” என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. குங் புளு என்று குறிப்பிட்டார்:‘கொரோனாவை 19 பெயர்களால் அழைப்பேன்’தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் ஆவேசம்
கொரோனாவை 19 பெயர்களால் அழைக்க முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் டிரம்ப் ஆவேசமாக கூறினார்.
2. அமெரிக்க கைதி விடுதலை; ஈரானுக்கு டிரம்ப் நன்றி: இரு தரப்பும் ஒப்பந்தம் செய்துகொள்ள வாய்ப்பு என தகவல்
அமெரிக்க கைதியை ஈரான் விடுதலை செய்தது. இதற்காக ஈரானுக்கு டிரம்ப் நன்றி தெரிவித்தார். இரு தரப்பு ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு உண்டு எனவும் கருத்து கூறினார்.
3. கொரோனாவுக்கு எதிராக போராடுவதில் டிரம்ப் தோல்வியடைந்து விட்டார் - ஜோ பிடன் விமர்சனம்
கொரோனாவுக்கு எதிராக போராடுவதில் டிரம்ப் தோல்வியடைந்து விட்டதாக, அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் விமர்சித்துள்ளார்.
4. ஈரானுக்கு வெண்டிலேட்டர்களை வழங்க தயார் - டிரம்ப் சொல்கிறார்
ஈரானுக்கு வெண்டிலேட்டர்களை வழங்க தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
5. “அனைவரும் முக கவசம் அணியுங்கள்” - டிரம்புடன் முரண்படுகிறார் மனைவி மெலனியா
கொரோனா பாதித்தவர்கள் முக கவசம் அணிகிற விவகாரத்தில் கணவர் டிரம்புடன் மெலனியா டிரம்ப் முரண்படுகிறார். அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.