உலக செய்திகள்

உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவை -அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு + "||" + World Health Organisation a 'puppet of China', Trump says as he mulls slashing US funding

உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவை -அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு

உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவை -அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு
உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவையாக உள்ளது என அமெரிக்க மீண்டும் குற்றஞ்சாட்டி உள்ளது.
வாஷிங்டன்

அமெரிக்க  ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார அமைப்பை சீனவின் "கைப்பாவை" என்று குற்றம்சாட்டினார். மேலும் அதற்கான அமெரிக்க ஆதரவை குறைப்பது அல்லது ரத்து செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக கூறினார்.

வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியதாவது:- 

உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவை, அவர்கள்  சீனாவை மையமாகக் கொண்டவர்கள்.உலக சுகாதார அமைப்பு எங்களுக்கு நிறைய மோசமான ஆலோசனைகளை வழங்கினார்கள்

எந்தவொரு நாடும் வழங்காத நிதியை உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா ஆண்டுதோறும் சுமார் 450 மில்லியன் டாலர் வழங்கி வருகிறது. ஆனால் நாங்கள் சரியாக நடத்தப்படவில்லை  இதனால் நிதியை குறைக்க நாங்கள் திட்டங்களை வடிவமைத்து உள்ளோம்.

சீனா ஆண்டுக்கு சுமார் 40 மில்லியன் மட்டுமே செலுத்துகிறது. எங்கள் 450 ஐ 40 ஆகக் குறைப்பது ஒரு யோசனை சிலர் அதை  பெரிதாக நினைக்கிறார்கள் என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. அதிபரானால் எச்1 பி விசாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்வேன்: ஜோ பிடன்
எனது நான் அதிபரானால் எச்.1 பி விசாவுக்கு தடை விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்வேன் என்று ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
2. இந்தியா-சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்கள்; உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் -அமெரிக்கா
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் எல்லை பதற்றங்கள் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என அமெரிக்கா கூறி உள்ளது.
3. கொரோனாவுக்கு எதிரான போரில் அமெரிக்க-இங்கிலாந்து ஒத்துழைப்பு; ராணி 2-ம் எலிசபெத், டிரம்ப் தொலைபேசியில் ஆலோசனை
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்தும் உலகளாவிய பொருளாதாரங்களை மீண்டும் திறப்பது குறித்தும் ஜனாதிபதி டிரம்பும், ராணி 2ம் எலிசபெத்தும் ஆலோசனை நடத்தினர்.
4. கொரோனாவை தொடர்ந்து புதிய வைரஸ் பரவல்: சீனாவுடன் ஒத்துழைப்பை நாடுகிறது உலக சுகாதார நிறுவனம்
கொரோனா வைரசைத் தொடர்ந்து புதிய வைரஸ் பரவும் விவகாரத்தில் சீனாவின் ஒத்துழைப்பை உலக சுகாதார நிறுவனம் நாடி உள்ளது.
5. லடாக் ஏரியில் ரோந்து செல்ல, சீனாவுக்கு பதிலடி கொடுக்க அதிக சக்தி வாய்ந்த படகுகளை எல்லைக்கு இந்தியா அனுப்புகிறது
லடாக் ஏரியில் ரோந்து செல்ல சீனா ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கப்பற்படை அதிக சக்தி வாய்ந்த படகுகளை எல்லைக்கு அனுப்புகிறது.