உலக செய்திகள்

மீண்டும் மாயமான கிம் ஜங் உன்... வடகொரியாவில் என்ன நடக்கிறது...? + "||" + Kim Jong Un Disappeared From View, But North Korea’s Problems Never Left

மீண்டும் மாயமான கிம் ஜங் உன்... வடகொரியாவில் என்ன நடக்கிறது...?

மீண்டும் மாயமான கிம் ஜங் உன்... வடகொரியாவில் என்ன நடக்கிறது...?
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் பொதுமக்கள் பார்வையில படாததால் அவரது மரணம் பற்றிய வதந்திகளை மீண்டும் இறக்கை கட்டி பறக்கிறது.
சியோல்

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மீண்டும் காணாமல் போனதாக வெளியாகும் செய்திகள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் காணாமல் போய் மீண்டும் திரும்பி வந்தவர், தற்போது மீண்டும் காணாமல் போய் உள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் கிம் ஜோங் உன் காணாமல் போனார். அவர் இறந்துவிட்டதாக, மூளை சாவு அடைந்துவிட்டதாக செய்திகள் பரவிய வண்ணமிருந்தது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் வடகொரியாவின் உழைப்பாளர் தினம் மற்றும் அங்கு இருக்கும் உர தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.  இந்த நிலையில் கிம் ஜாங் உன் மீண்டும் காணாமல் போய் இருக்கிறார். மே 1ம் தேதி வந்த கிம் ஜோங் உன் வெளியே எங்கும் காணப்படவில்லை. மூன்று வாரமாக அவர் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை.

அதோடு கடந்த முறை வெளியே வந்தது உண்மையில் கிம் ஜாங் உன் தானா என்றகேள்வி எழுந்துள்ளது. உண்மையில் அது கிம்தானா அல்லது அவரைப்போலவே இருக்கும் வேரு ஒரு நபரா என்றும் கேள்வி எழுந்து இருக்கிறது. அப்போது வெளியே வந்த நபருக்கும் கிம் ஜோங்கிற்கு நிறைய வித்தியாசம் இருப்பதாக இணையத்தில் ஆதாரங்கள் வெளியானது. நிறைய புகைப்படங்கள் இது தொடர்பாக வெளியானது.

இந்த நிலையில் அடுத்த திருப்பமாக வடகொரியாவின் முன்னாள் அதிபர்கள் புகைப்படங்கள், சிலைகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருவதும் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி கிம் இல் சங் நினைவு சதுக்கத்தில் இருந்து கிம் ஜாங் உன்னின் தாத்தா கிம் இல் சங் மற்றும் அப்பா கிம் ஜாங் இல் ஆகியோரின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. அங்கு இருந்த கிம் இல் சங்கின் சிலையும் நீக்கப்பட்டுள்ளது. திடீர் என்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அங்கு இப்படி நடக்கும் மாற்றங்கள், அரசியலில் எதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பதை காட்டுவதாக கூறுகிறார்கள். வடகொரியாவின் அரசியல் தலைவர்களுக்கு மரணத்திற்கு பின்தான் சிலைகள், புகைப்படங்கள் வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அங்கு கிம் ஜாங்  உன் புகைப்படத்தை வைக்க திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக வெளியாகும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் பெரிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு சில நாட்களுக்கு முன் உயர் அதிகாரிகள் சிலர் பணியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வடகொரியாவின் வடபகுதியில் அமைந்துள்ள ராசன் நகரம் மொத்தமாக முடக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கலாம் அல்லது,

ராசன் நகரில் ஏதோ முக்கிய நிக்ழ்ச்சி நடக்க போவதாக  நகர மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.இந்த மாத துவக்கத்தில் இருந்தே, ராசன் நகருக்குள் வெளியாட்களை செல்ல அனுமதிப்பதில்லை எனவும்,

ராசன் நகர மக்கள் வெளியே செல்லவும் அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக, அந்த பிராந்திய மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ரெயில் பயணிகள் மட்டுமல்ல, சாலை மார்க்கம் பயணிப்பவர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளே நுழைவதைத் தடுத்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வடகொரியா பொருளாதார நெருக்கடி: நூற்றுக்கணக்கான அதிகாரிகள் நீக்கம்- கிம் ஜாங் உன் நடவடிக்கை
வடகொரியா பொருளாதார சீரழிவு நூற்றுக்கணக்கான அதிகாரிகள் நீக்கி அதிபர் கிம் ஜாங் உன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
2. எப்படி இருந்த கிம் ஜாங் உன்... இப்படி ஆயிட்டாரே... வடகொரியா மக்கள் கவலை -வீடியோ
அதிபர் கிம் ஜாங் உன்னின் எடை இழப்பு விவகாரம் வடகொரியா நாட்டு மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
3. வடகொரியா: பொருளாதாரத்தை சீரமைத்தல் குறித்து அதிகாரிகளுடன் அதிபர் கிம் ஆலோசனை
வடகொரிய நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் சீரமைத்தல் குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடம் அதிபர் கிம் ஆலோசனை நடத்தினார்.
4. ஜப்பானை நோக்கி ஏவுகணை ஏவிய வட கொரியா... மீண்டும் அதிரடியை தொடங்கிய கிம் ஜாங் உன்..அதிகரிக்கும் பதற்றம்!
ஜப்பானை நோக்கி ஏவுகணை ஏவிய வட கொரியா. ஜப்பான் மற்றும் அமெரிக்க ஆகிய இரண்டு நாடுகளும் வட கொரியாவின் ஏவுகணை சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.