தேசிய செய்திகள்

அடுத்த மாதம் முதல் தினமும் 200 ஏசி அல்லாத ரெயில்கள் இயக்கப்படும் ; விரைவில் ஆன்லைன் முன்பதிவு + "||" + Railways To Run 200 Non-AC Trains Daily From June 1, Online Bookings Soon

அடுத்த மாதம் முதல் தினமும் 200 ஏசி அல்லாத ரெயில்கள் இயக்கப்படும் ; விரைவில் ஆன்லைன் முன்பதிவு

அடுத்த மாதம் முதல் தினமும் 200 ஏசி அல்லாத ரெயில்கள் இயக்கப்படும் ; விரைவில் ஆன்லைன் முன்பதிவு
ஜூன் 1 முதல் தினமும் 200 ஏசி அல்லாத ரெயில்களை ரெயில்வே அமைச்சகம் இயக்க உள்ளது, விரைவில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கும்.
புதுடெல்லி

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு தழுவிய ஊரடங்கால்  நிறுத்தப்பட்ட ரெயில் சேவை ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு  தொடங்குகியது

ரெயில் போக்குவரத்தை படிப்படியாக தொடங்கும் வகையில் டெல்லியில் இருந்து 15 சிறப்பு ரெயில்களாக இயக்கப்படுகின்றன.

இந்த ரெயில்கள் சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை சென்டிரல், அகமதாபாத், செகந்திராபாத், திப்ருகார், அகர்தலா, ஹவ்ரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேசுவர், மட்கோன், ஜம்முதாவி ஆகிய ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரெயில்கள் அங்கு சென்றுவிட்டு மீண்டும் டெல்லிக்கு திரும்பி வரும்.

இந்த சிறப்பு ரெயில் செல்லும் நேரம் குறித்த கால அட்டவணையை ரெயில்வே வெளியிட்டுள்ளது. இதன்படி, சென்னையில் இருந்து வாரம் இருமுறை டெல்லிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரெயில் காலை 6.35 மணிக்கு இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

தற்போது உள்ள 15 ரெயில் சேவைகள் அடுத்தமாதம் முதல் 200 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த சேவையில் ஏசி வசதி  இல்லாத ரெயில்களும் அடங்கும். 

நேற்று ரெயில்வே அமைச்சகம் வெளியிடப்பட்ட  ஒரு டுவீட்டில், ரெயில்வே ஷ்ராமிக் சிறப்பு ரயில்களைத் தவிர, "ஜூன் 1 முதல் தினமும் 200 கூடுதல் கால அட்டவணை ரெயில்களை இயக்கும், இது ஏர் கண்டிஷனிங் அல்லாத இரண்டாம் வகுப்பு ரெயில்களாக இருக்கும், மேலும் இந்த ரயில்களின் முன்பதிவு ஆன்லைனில் கிடைக்கும்" என கூறப்பட்டு உள்ளது.

ரெயில்கள் குறித்த தகவல்கள் விரைவில் கிடைக்கும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

மே 22 முதல் காத்திருப்பு பட்டியலிடப்பட்ட டிக்கெட்டுகளை வழங்கத் தொடங்குவதாக ரெயில்வே கடந்த வாரம் சுட்டிக்காட்டியது. 

ஊரடங்கிற்கு முன்பு, ரெயில்வே ஒவ்வொரு நாளும் சுமார் 12,000 ரெயில்களை இயக்குகியது. மே 1 முதல், நாட்டின் பல்வேறு மூலைகளிலிருந்தும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 366 சிறப்பு ரெயில்களை இயக்கியது.

தொடர்புடைய செய்திகள்

1. 2-3 ஆண்டுகளில் 44 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும் -ரெயில்வே வாரியம்
2-3 ஆண்டுகளில் 44 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே வாரியத்தலைவர் வி.கே.யாதவ் கூறி உள்ளார்.
2. தமிழகத்தில் தனியார் ரெயில்களை இயக்குவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 14 வழித்தடங்கள்
தமிழகத்தில் தனியார் ரெயில்களை இயக்குவதற்கு 14 வழித்தடங்களை இந்திய ரெயில்வே அடையாளம் கண்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...