உலக செய்திகள்

சீனாவில் கொரோனா வைரஸ் எட்டு மாதங்களுக்கு முன்பே உருவாகி இருக்கலாம்? + "||" + coronavirus in China may have evolved eight months ago?

சீனாவில் கொரோனா வைரஸ் எட்டு மாதங்களுக்கு முன்பே உருவாகி இருக்கலாம்?

சீனாவில் கொரோனா வைரஸ் எட்டு மாதங்களுக்கு முன்பே உருவாகி இருக்கலாம்?
சீனாவில் கொரோனா வைரஸ் எட்டு மாதங்களுக்கு முன்பே உருவாகி அறிகுறிகள் எதுவுமின்றி பரவி இருக்காலம் என்று ஸ்பெயின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மாட்ரீட்

கடந்த ஆண்டு டிசம்பர் மாத்தில் சீனாவின் ஹுபே மாகாணத்தின் உகான் நகரில் கொரோனா பரவ தொடங்கியதாக நம்பப்படுகிறது. இது குறித்து ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கடந்த அக்டோபர்-நவம்பர் மாதங்களில் வவ்வால்களிடம் தோன்றிய வைரஸ் அடையாளம் தெரியாக பிராணி அல்லது பிராணிகளின் பாகங்களில் பரவி உள்ளது. அந்த சமயத்தில், சீனாவில், அடுத்தடுத்து மூன்று பெரிய திருவிழாக்கள் வந்ததையொட்டி, உயிருள்ள பிராணிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் கொள்முதல் மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது.

இந்த வகையில், அறிகுறியின்றி அமைதியாக பரவிய கொரோனா, டிசம்பரில், திருவிழா காலத்தில் அதிக மக்கள் கூடிய போது, வேகமாக பரவி, பாதிப்பை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, உகான் நகரில், சீனாவின் புத்தாண்டுக் கொண்டாட்டம், குடும்ப விருந்து என்ற இரு பெரிய விழாக்களும், அவற்றில் மக்கள் அதிக அளவில் கூடியதும், கொரோனா பரவ முக்கிய காரணம்.

சீனாவில், சார்ஸ் வைரஸ் பரவ வவ்வால்கள், எறும்பு திண்ணிகள் உள்ளிட்ட பிராணிகள் காரணமாக அமைந்தன. ஆனால், வைரஸ் பாதித்த முதல் மனிதர் யார் என்று அடையாளம் காண முடியவில்லை.வைரஸ் பரவுவதற்கு பலவற்றை காரணமாக அமைகின்றது. அதில், வைரஸ் ஆய்வுக் கூடங்களும் அடங்கும். முதலில், வைரஸ் கிராமபுற பண்ணைகளில் பரவ ஆரம்பித்திருக்க கூடும்.

ஏனெனில், வைரஸ் பரவ கிராமபுற சூழல்கள் சாதகமாக உள்ளது. இனியும் கொரோனா போல மேலும் பல வைரஸ் பரவ வாய்ப்புள்ளது.தற்போது, கொரோனா வைரஸ், அர்போ வைரஸ், இன்புளுயன்சா வைரஸ் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புதான் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இவ்வாறு, அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. விரைவில் 2-ஆம் கட்ட மனித சோதனைகளுக்கு முன்னேறும் அமெரிக்க கொரோனா தடுப்பூசி
அமெரிக்காவின் புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி விரைவில் 2 ஆம் கட்ட மனித சோதனைகளுக்கு முன்னேறுகிறது.
2. சென்னை: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; ராயபுரம் மண்டலத்தில் 3 ஆயிரத்தை தாண்டியது
சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள் ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது.
3. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,07,615 ஆக உள்ளது இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
4. நோய் அறிகுறியுடன் சீனாவில் மேலும் 15 பேருக்கு கொரோனா
நோய் அறிகுறியுடன் சீனாவில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கொரோனா வைரஸ் தானே பலவீனமடைந்து வருகிறதா...? ஆராய்ச்சியாளர்கள் இடையே கடும் விவாதம்...
கொரோனா வைரஸ் தன்னை பலவீனப்படுத்தி முடிவுக்கு வந்துவிடுமா என்பது குறித்த விவாதம் எழுந்து உள்ளது.