தேசிய செய்திகள்

பெங்களூரை உலுக்கிய பயங்கர சத்தம்; பொதுமகக்ள் அச்சம் + "||" + Heard a loud 'boom' in Bengaluru? Officials are investigating what it was

பெங்களூரை உலுக்கிய பயங்கர சத்தம்; பொதுமகக்ள் அச்சம்

பெங்களூரை உலுக்கிய பயங்கர சத்தம்; பொதுமகக்ள் அச்சம்
பெங்களூரை உலுக்கிய பயங்கர சத்தத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர் விசாரணை நடத்த கோரிக்கை விடப்பட்டு உள்ளது.
பெங்களூரு

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் 1.30 மணியளவில் பயங்கர சத்தம் கேட்டது. இந்த பயங்கர இரைச்சல் மிகுந்த அந்த சத்தத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

சிலர் பயங்கர  'இடி சத்தம்' கேட்டதாகக் கூறினர் மற்றவர்கள் ஐந்து விநாடிகள் வரை நடுக்கம் மற்றும் ஜன்னல்கள் சத்தமிடுவதை உணர்ந்ததாக கூறினர்.மக்கள் யாரும் இதுவரை கேட்டிராத வகையிலான அந்த மர்ம சத்தம் பல முறை ஒலித்தது. இந்த பயங்கர சத்தத்தால் வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் அதிர்ந்தன. 

பெங்களூருவின் குக் டவுன், விவேக் நகர், ராமமூர்த்தி நகர், ஓசூர் சாலை, எச்ஏஎல், ஓல்ட் மெட்ராஸ் சாலை, உல்சூர், குண்டனஹள்ளி, கம்மனஹள்ளி, சி.வி.ராமன் நகர், வைட்ஃபீல்ட் மற்றும் எச்.எஸ்.ஆர் லேஅவுட் ஆகிய பகுதிகளில் இந்த சத்தம் கேட்டது

இதற்கிடையில், பெங்களூரில் இன்று ஏற்பட்ட பயங்கர சத்தம் தொடர்பாக விசாரணை நடத்த அவசியம் ஏற்பட்டுள்ளதாக கர்நாடக மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் இன்று ஒலித்த பெரும் சத்தத்தால் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.  

பெங்களூரு போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ்  நகரத்தில் எங்கும் சேதம் கேட்டதாக  அவசர எண் 100 க்கு எந்த அழைப்பும் வரவில்லை.  "இது விமானமா என்று சோதிக்க விமானப்படை கட்டுப்பாட்டு அறையை நாங்கள் கேட்டுள்ளோம் விமானப்படை விரைவில்உறுதிப்படுத்தும் என கூறினார்.

நகரத்தின் மீது பறக்கும் போர் விமானத்திலிருந்து இந்த ஒலி  இருக்கலாம் என்று ஊகங்கள் உள்ளன. இருப்பினும், இதை காவல்துறை அல்லது விமானப்படை உறுதிப்படுத்தவில்லை.

போர் விமானங்கள் பறந்தால் ஏற்படும் சோனிக் பூம்  இருந்ததாக கூறுகின்றனர். சோனிக் பூம்  என்பது விமானத்தின் வேகமான இயக்கத்தின் விளைவாகும் - இந்த பொருள்கள் ஒலியின் வேகத்தை விட வேகமாக மேல்நோக்கி பறக்கும்போது இடி ஒலி உருவாகிறது.

பெங்களூரு வானத்தில் பறக்கும் சுகோய் -30 ஜெட் விமானம் இதுவாக இருக்கலாம் என்று ஒரு உயர் போலீஸ் அதிகாரி கூறினார். ஆனால் விமானப்படை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) இலகுரக போர் விமானங்களின் (எல்சிஏ) வழக்கமான விமான சோதனைகளை நடத்தக்கூடும் என்று சிலர் சுட்டிக்காட்டினர்.


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகா; கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 110 பேர் பலி
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,007-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. பெங்களூருவில் 2 மணி நேரமாக தெருவோரம் வைக்கப்பட்டிருந்த கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம்
கொரோனா பாதிக்கப்பட்டவர் ஒருவர் வீட்டிலையே உயிரிழந்ததை தொடர்ந்து, உடலை தெருவோரம் வைத்தபடி 2 மணி நேரமாக அந்த குடும்பத்தினர் அம்புலன்ஸூக்கு காத்திருந்துள்ளனர்.
3. மராட்டியத்தில் இருந்து வருபவர்கள் 7 நாட்கள் முகாமில் தனிமைப்படுத்தப்படுவர்- கர்நாடக அரசு
மராட்டியத்தில் இருந்து கர்நாடகம் வருபவர்கள் 7 நாட்கள் முகாமில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
4. 59 போலீசாருக்கு கொரோனா; பெங்களூருவில் 6 போலீஸ் நிலையங்கள் மூடல் - மந்திரி பசவராஜ் பொம்மை தகவல்
பெங்களூருவில் 59 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் 6 போலீஸ் நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
5. ‘இந்திய அணியின் பயிற்சி முகாமை பெங்களூருவில் இருந்து மாற்ற முடியாது’ - ஆக்கி இந்தியா அறிவிப்பு
கொரோனா பாதிப்பால் ‘சாய்’ சமையல்காரர் மரணம் அடைந்தாலும் இந்திய ஆக்கி அணியின் பயிற்சி முகாமை பெங்களூருவில் இருந்து மாற்ற முடியாது என்று ஆக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...