தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்தது + "||" + With 2,250 fresh cases, Maharashtra's Covid-19 count breaches 39,000-mark

மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்தது

மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்தது
மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 39 ஆயிரத்தை கடந்துள்ளது.
மும்பை,

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி உள்ள கொடிய கொரோனா இந்தியாவையும் புரட்டி போட்டுள்ளது. இந்திய அளவில் மராட்டியம் தான் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. இங்கு கொரோனா புதிய வேகமெடுத்து பரவி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்தநிலையில் மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,297 ஆக அதிகரித்துள்ளது. 

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,390 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மேலும் 679 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், அங்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 10,318 ஆக அதிகரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கோவை கலெக்டருக்கு கொரோனா தொற்று தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
2. போலீசார் உள்பட 104 பேருக்கு கொரோனா உறுதி மதுக்கரை போலீஸ் நிலையம் மூடப்பட்டது
கோவை மாவட்டத்தில் போலீசார் உள்பட 104 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து மதுக்கரை போலீஸ் நிலையம் மூடப்பட்டது.
3. போரூர் போலீஸ் உதவி கமிஷனருக்கு கொரோனா
போரூர் போலீஸ் உதவி கமிஷனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
4. பல்லடத்தில் ஊழியருக்கு கொரோனா; கோர்ட்டு மூடப்பட்டது
பல்லடத்தில் கோர்ட்டு ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் கோர்ட்டு மூடப்பட்டது.
5. கொரோனாவின் கோரப்பிடியில் மராட்டியம்: இன்று மேலும் 7,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 7,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.