தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் வீரமரணம் + "||" + Two BSF jawans killed in militant attack in Kashmir

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் வீரமரணம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் வீரமரணம்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
ஜம்மு,   

மத்திய காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அடுத்த பாண்டச் சவுக் பகுதியில் 37 பட்டாலியனைச் சேர்ந்த இரண்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 முதல் 3 பயங்கரவாதிகள், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீது  சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ஒரு வீரர் வீரமரணம் அடைந்தார். மற்றொரு வீரர் படுகாயங்களுடன் ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் டிஜிபி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்பட முக்கிய அதிகாரிகளுடன் அமித்ஷா திடீர் ஆலோசனை
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது.
2. காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
3. காஷ்மீர்: எல்லையோரம் செயலிழந்த நிலையில் கிடந்த ட்ரோன் விமானம்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையோரம் செயலிழந்த நிலையில் கிடந்த டிரோன் விமானத்தை போலீசார் கைப்பற்றினர்.
4. காஷ்மீர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சாலையோரம் பிணமாக மீட்பு
கடந்த ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் சேர்ந்த பயங்கரவாதி சாலைப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்டுள்ளான்.
5. நைஜீரியாவில் கிராமங்களுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.