தேசிய செய்திகள்

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்குகிறது: 25-ந்தேதி முதல் விமான போக்குவரத்து - மத்திய மந்திரி அறிவிப்பு + "||" + Domestic Airline Launches in India: First aviation from 25th - Notice of the Union Minister

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்குகிறது: 25-ந்தேதி முதல் விமான போக்குவரத்து - மத்திய மந்திரி அறிவிப்பு

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்குகிறது: 25-ந்தேதி முதல் விமான போக்குவரத்து - மத்திய மந்திரி அறிவிப்பு
இந்தியாவில் வருகிற 25-ந்தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்படும் என்று அந்த துறையின் மந்திரி ஹர்தீப் சிங் பூரி அறிவித்து உள்ளார்.
புதுடெல்லி, 

கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல், நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர பஸ், ரெயில், விமானம் உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. பின்னர் அவ்வப்போது ஊரடங்கு தொடர்பான பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இதைத்தொடர்ந்து, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக கடந்த 1-ந்தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. வருகிற ஜூன் 1-ந்தேதி முதல் நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களுக்கு இடையே பயணிகள் ரெயில் இயக்கப்படும் என்று ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் நேற்று முன்தினம் அறிவித்து உள்ளார்.

4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைய இருக்கிறது.

விமான போக்குவரத்தை பொறுத்தமட்டில், வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணிகள் விமான சேவை அறவே நிறுத்தப்பட்டது. ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியர்களை மீட்டு வருவதற்காக மட்டும் சில விமானங்கள் இயக்கப்பட்டன. இதைப்போல மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொண்டு செல்வதற்காகவும் சில விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இதனால் பெரும்பாலான விமானங்கள், விமானநிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அவ்வப்போது விமானங்களில் பராமரிப்பு பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே ஊரடங்கு முடிவடைந்த பிறகுதான் விமான போக்குவரத்து தொடங்கும் என கூறப்பட்டது.

இந்த நிலையில் உள்நாட்டு விமான போக்குவரத்து அதற்கு முன்பே, அதாவது வருகிற 25-ந் தேதி முதல் தொடங்கும் என்ற அறிவிப்பு நேற்று வெளியானது.

இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “உள்நாட்டு சிவில் விமான போக்குவரத்து 25-ந்தேதி முதல் உரிய அளவீட்டு முறையில் மீண்டும் தொடங்கும். அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களும் அதற்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. விமான இயக்கத்துக்கான நடைமுறைகள் தனித்தனியாக வழங்கப்படும்” என்று கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் 30 குழுக்கள்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று முதன்மை அறிவியல் ஆலோசகர் கே விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
2. "இந்தியாவை தட்டி கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" சீனாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் கருத்து
இந்தியாவிற்கும், சீனாவிற்கு இடையே நடக்கும் மோதலால் பெரிய ஆபத்து வரப் போவதாக பாகிஸ்தான் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது.
3. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.51 லட்சமாக உயர்வு: 24 மணி நேரத்தில் 6,387 பேருக்கு தொற்று
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 1.51 லட்சமாக உயர்ந்தது. 24 மணிநேரத்தில் 6,387 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
4. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,45,380 ஆக உயர்வு: பலி எண்ணிக்கை 4,167 ஆனது
இந்தியாவில் தொடர்ந்து 5-வது நாளாக 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆகவும், பலி எண்ணிக்கை 4,167 ஆகவும் உயர்ந்துள்ளது.
5. இந்தியாவில் 2 மாதங்களுக்கு பிறகு விமான போக்குவரத்து தொடங்கியது: 630 விமானங்கள் ரத்தானதால் பயணிகள் அவதி
இந்தியாவில் 2 மாதங்களுக்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நேற்று விமான போக்குவரத்து தொடங்கியது. முதல் நாளிலேயே 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.