மாநில செய்திகள்

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி + "||" + Tamil Nadu government grants conditions for shootings

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி
சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னை

கொரோனா தீவிரம் காரணமாக நாடு முழுவதும்4- ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு முதலில் அமல்படுத்தப்பட்டதிலிருந்து சினிமா சார்ந்த பணிகளும் நிறுத்துவைக்கப்பட்டது. இதனால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை போன்ற சினிமாவை சார்ந்து இருக்கும் மக்களின் அன்றாட வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையில், போஸ்ட் புரொடொக்‌ஷன் பணிகளுக்கு மட்டும் தமிழக அரசு, கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதி அளித்தது. 

இந்த நிலையில், சின்னத்திரை படப்பிடிப்புகளை நாளை முதல் நிபந்தனைகளுடன் நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தடை செய்யப்பட்ட மற்றும் பொது இடங்களில் படப்பிடிப்புகளை நடத்தக்கூடாது. உள்ளரங்க படப்பிடிப்புகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. 

படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகர், நடிகைகளைத் தவிர தொழில்நுட்ப கலைஞர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். சென்னையில் படப்பிடிப்பு நடத்த மாநகராட்சி ஆணையர், மாவட்டங்களில்  ஆட்சியர் அனுமதியை பெற வேண்டும். படப்பிடிப்பில் அதிகபட்சம் 20 பேர் பங்கற்கலாம்.  போன்ற நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மின் கட்டணம் செலுத்த ஜூன் 6ந்தேதி வரை காலஅவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு
வீடுகள், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6ந்தேதி வரை நீ்ட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
2. தமிழகத்தில் இன்று முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும்-50 சதவீத ஊழியர்கள் பணிபுரிவார்கள்
தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் இன்று(மே 18) முதல் வாரத்தின் ஆறு நாட்களும் செயல்பட உள்ளன. 50 சதவீத அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர்.
3. ஒரு மதுக்கடையில் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே- டாஸ்மாக் நிர்வாகம்
தமிழகத்தில் மதுபானக்கடைகள் நாளை முதல் திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
4. தமிழகத்தில் மதுக்கடைகள் நாளை திறப்பு- டாஸ்மாக் நிர்வாகம்
தமிழகத்தில் மதுபானக்கடைகள் நாளை திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
5. மதுக்கடைகள் மூடிய வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
மதுக்கடைகள் மூடிய வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.