மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம் + "||" + Heat wave for next three days in Tamil Nadu

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

வங்க கடலின் தென்பகுதியில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியது. அந்த புயலுக்கு ‘உம்பன்’ என பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் மேலும் வலுவடைந்து சூப்பர் புயலாக மாறி வடக்கு திசையில் மேற்கு வங்காளத்தை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாக மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களையொட்டிய கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்பட்டது.  இந்தப்புயல் மேற்கு வங்காளத்தில் கரையைக் கடந்தது. 

உம்பன் புயல் காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஈர்த்துக்கொண்டது. இதனால், தமிழகத்தில் குறிப்பாக வட தமிழகத்தில்  வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   பலத்த காற்று வீசும் என்பதால் மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இடியுடன் கூடிய மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
2. தென் மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் புயல் ஆனது- சென்னை வானிலை ஆய்வு மையம்
தென் மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் புயல் ஆனது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக தமிழத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
4. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை தொடரும் -சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. வடகிழக்கு பருவமழை மேலும் 4 நாட்களுக்கு தொடர வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவமழை மேலும் 4 நாட்களுக்கு தொடர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.