உலக செய்திகள்

அமெரிக்காவில் மருத்துவ கவுன்சிலிங் வழங்கும் நாய்க்கு கவுரவ டாக்டர் பட்டம் + "||" + Honorary Doctorate for Dog providing medical counseling

அமெரிக்காவில் மருத்துவ கவுன்சிலிங் வழங்கும் நாய்க்கு கவுரவ டாக்டர் பட்டம்

அமெரிக்காவில் மருத்துவ கவுன்சிலிங் வழங்கும் நாய்க்கு கவுரவ டாக்டர் பட்டம்
அமெரிக்காவில் மருத்துவ கவுன்சிலிங் வழங்கும் லேப்ரடார் வகை நாய்க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டு உள்ளது.
நியூயார்க்,

அமெரிக்காவின் விர்ஜீனியா கால்நடை மருத்துவ தொழில் நுட்ப பல்கலைக்கழகம் இந்த வருடத்திற்கான பட்டமளிப்பு விழாவை சிறப்புடன் நடத்தியது.  இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், லேபரடார் ரெட்ரீவர் வகையை சேர்ந்த மூஸ் என பெயரிடப்பட்ட 8 வயது கொண்ட நாய் ஒன்றுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

கால்பந்து போட்டிகள், கிளப் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்து கொள்வதுடன், கவலை, அதிர்ச்சி மற்றும் மனநலம் சார்ந்த பாதிப்புகளில் இருந்து விடுபட உதவும், மருத்துவ மாணவர்களுக்கான கவுன்சிலிங் பணியிலும் மூஸ் ஈடுபட்டு வந்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு வரும் மூஸ், இதற்காக நடந்த 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஆலோசனை கூட்டங்களிலும் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உதவி புரிந்து உள்ளது.  அதனால் இதனை கவுரவிக்க பல்கலைக்கழகம் முடிவு செய்தது.  கடந்த பிப்ரவரியில் மூசுக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.  அதற்கான சிகிச்சையும் பெற்று வருகிறது.  எனினும் வழக்கம்போல் மகிழ்ச்சியுடனேயே உள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு விர்ஜீனிய கால்நடை மருத்துவ கூட்டமைப்பின் விலங்குகளுக்கான ஹீரோ விருது ஒன்றையும் மூஸ் பெற்றுள்ளது.  இந்நிலையில், மூஸ், கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டு உள்ளது.