மாநில செய்திகள்

கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உரிய பாதுகாப்புடன் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை + "||" + Corona Disease Control Areas With due care Selection centers will be set up Department of Education

கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உரிய பாதுகாப்புடன் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை

கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உரிய பாதுகாப்புடன் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை
கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உரிய பாதுகாப்புடன் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,

கொரோனா பாதிப்பின் காரணமாக தற்போது 4-வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கும் நிலையிலும், கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.

ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கான தேர்வுகளை நடத்துவது பாதிக்கப்பட்டு உள்ளது.  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அடுத்த மாதம் (ஜூன்) 15-ந்தேதி தொடங்கி, 25-ந்தேதி வரை தேர்வு நடைபெறும் என நேற்று முன்தினம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். 

இதையடுத்து கொரோனா வைரஸ் தொற்றை பரவாமல் தடுக்க முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்க கூடாது என மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உரிய பாதுகாப்புடன் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் 10ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கக் கோரிய வழக்கிலும் பள்ளிக்கல்வித்துறை பதில் அளித்துள்ளது.