மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Coronation affects 776 people in one day in Tamil Nadu

தமிழகத்தில் ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.  கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.  இந்த உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அதிக அளவாக 400 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 5,882ல் இருந்து 6,282ஆக உயர்ந்து உள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,191ல் இருந்து 13,967 ஆக உயர்ந்து உள்ளது.  இன்று 7 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 87ல் இருந்து 94 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு 14% குறைவு; அதிபர் டிரம்ப் பேட்டி
அமெரிக்காவில் கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு 14% அளவிற்கு குறைந்துள்ளது என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
2. நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின் புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
3. இந்தியாவில் 4 நாட்களுக்கு பின் குறைந்த பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 53,601 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 871 பேர் பலியாகி உள்ளனர்.
4. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.