தேசிய செய்திகள்

புயலுக்கு பலி; குடும்பத்துக்கு இழப்பீடு: மம்தா பானர்ஜி அறிவிப்பு + "||" + Storm kills; Family compensation: Mamta Banerjee announces

புயலுக்கு பலி; குடும்பத்துக்கு இழப்பீடு: மம்தா பானர்ஜி அறிவிப்பு

புயலுக்கு பலி; குடும்பத்துக்கு இழப்பீடு:  மம்தா பானர்ஜி அறிவிப்பு
அம்பன் புயலுக்கு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இழப்பீடு அறிவித்துள்ளார்.
கொல்கத்தா,

தெற்கு வங்க கடலில் உருவான ஆம்பன் புயல் மேற்கு வங்காளத்தின் திகா கடற்கரை மற்றும் வங்காளதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே சுந்தரவன காடுகள் பகுதியையொட்டி நேற்று மதியம் 2.30 மணியளவில் கரையை கடந்தது.

புயல் கரையை கடந்தபோது மணிக்கு 160 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது.  இதனால் மேற்கு வங்காளத்திலும், ஒடிசாவிலும் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  புயல் பாதிப்பினையடுத்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று நடத்தினார்.

இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய இரு மாவட்டங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன.  அவற்றை நாம் மீண்டும் கட்டமைக்க வேண்டும்.  மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என மத்திய அரசை நான் வலியுறுத்துவேன்.

புயலுக்கு 72 பேர் உயிரிழந்து உள்ளனர் என தகவல்கள் வெளிவந்து உள்ளன.  உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ரூ.2 முதல் ரூ.2.5 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் வரும் அக்டோபர் 5ந்தேதி வரை அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருக்கும்; மாநில கல்வி இயக்குனரகம் அறிவிப்பு
டெல்லியில் வரும் அக்டோபர் 5ந்தேதி வரை அனைத்து பள்ளி கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என்று மாநில கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.
2. பெண்களை பின்தொடர்ந்தால் 7 ஆண்டு சிறை வரதட்சணை கொடுமைக்கு 10 ஆண்டு ஜெயில் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
பெண்களை பின்தொடர்ந்தால் 7 ஆண்டு சிறை தண்டனையும், வரதட்சணை கொடுமைகளுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கவும் சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
3. விமானத்துக்குள் புகைப்படம் எடுத்தால் நடவடிக்கை; சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு
விமானத்துக்குள் புகைப்படம் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
4. தேதி மாற்றம்: ஜனவரி 20-ந்தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு; தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
தமிழகத்தில் ஜனவரி 15-ந்தேதிக்குப் பதிலாக, 20-ந்தேதி வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார்.
5. மாணவர் விக்னேஷ் தற்கொலை: குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிவாரண நிதி; அரசு வேலை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து, அவருடைய குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிவாரண நிதியும், குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.