மாநில செய்திகள்

தி.மு.க. துணை பொது செயலாளர் பதவியில் இருந்து வி.பி. துரைசாமி நீக்கம்; மு.க. ஸ்டாலின் அறிவிப்பு + "||" + DMK VP Duraisamy removal from the post of Deputy Secretary General Stalin announcement

தி.மு.க. துணை பொது செயலாளர் பதவியில் இருந்து வி.பி. துரைசாமி நீக்கம்; மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

தி.மு.க. துணை பொது செயலாளர் பதவியில் இருந்து வி.பி. துரைசாமி நீக்கம்; மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
தி.மு.க. துணை பொது செயலாளர் பதவியில் இருந்து வி.பி. துரைசாமி நீக்கப்பட்டு உள்ளார்.
சென்னை,

தி.மு.க.வில் துணை பொது செயலாளராக இருந்து வந்தவர் வி.பி. துரைசாமி.  அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அவரை அந்த பதவியில் இருந்து இன்று நீக்கியுள்ளார்.  அவருக்கு பதிலாக முன்னாள் மந்திரி அந்தியூர் செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இதுபற்றி துரைசாமி ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், பதவி பறிப்பு முன்பே எதிர்பார்த்த ஒன்று.  என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது எனக்கு தெரியும்.  இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.  எனக்கு எதிராக சிலர் சதி செய்துள்ளனர் என கூறினார்.

இன்னும் 3 நாளில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அறிவிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.  கடந்த சில நாட்களுக்கு முன் பா.ஜ.க. தமிழக தலைவர் முருகனை துரைசாமி சந்தித்து பேசினார்.  இதனை தொடர்ந்து கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து நீக்கம் பற்றிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் புதிய ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு; மத்திய ரெயில்வே மந்திரி அறிவிப்பு
தமிழகத்தில் புதிய ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் மக்களவையில் அறிவித்து உள்ளார்.
2. டெல்லியில் வரும் அக்டோபர் 5ந்தேதி வரை அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருக்கும்; மாநில கல்வி இயக்குனரகம் அறிவிப்பு
டெல்லியில் வரும் அக்டோபர் 5ந்தேதி வரை அனைத்து பள்ளி கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என்று மாநில கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.
3. பெண்களை பின்தொடர்ந்தால் 7 ஆண்டு சிறை வரதட்சணை கொடுமைக்கு 10 ஆண்டு ஜெயில் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
பெண்களை பின்தொடர்ந்தால் 7 ஆண்டு சிறை தண்டனையும், வரதட்சணை கொடுமைகளுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கவும் சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
4. விமானத்துக்குள் புகைப்படம் எடுத்தால் நடவடிக்கை; சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு
விமானத்துக்குள் புகைப்படம் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
5. சட்டம் மற்றும் ஒழுங்கை கவனிக்க முடியவில்லை எனில் பதவியில் இருந்து விலகுங்கள்; தாக்கப்பட்ட கடற்படை அதிகாரி பேட்டி
சட்டம் மற்றும் ஒழுங்கை கவனிக்க முடியவில்லை எனில் முதல் மந்திரி பதவியில் இருந்து விலகுங்கள் என உத்தவ் தாக்கரேவை, சிவசேனா தொண்டர்களால் தாக்கப்பட்ட ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி கூறியுள்ளார்.