உலக செய்திகள்

கொரோனா பிடியில் இருந்து தப்பிய நாடுகள்: மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? + "||" + Which countries have not reported any coronavirus cases?

கொரோனா பிடியில் இருந்து தப்பிய நாடுகள்: மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?

கொரோனா பிடியில் இருந்து தப்பிய நாடுகள்: மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
உலகம் முழுவதும் கோர தாண்டவமாடி வரும் கொரோனா, ஒரு சில நாடுகளில் அதனால் கால் பதிக்க முடியவில்லை.
வாஷிங்டன்,

சீனாவின் உகான் நகரில் டிசம்பர் 2019-ம் ஆண்டு பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் கோர தாண்டவமாடி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா நோய்க்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 3 லட்சத்து 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நோய் பாதிப்பிலிருந்து குணமானோரின் எண்ணிக்கை 20 லட்சத்து 33 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உலகின் பல்வேறு நாடுகளிலும் 27 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.


இந்தநிலையில், அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பரவி வரும் கொரோனா தொற்று சில நாடுகளில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.  190-க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனா பாதிப்பால் கடுமையான சூழலை சந்த்தித்துவரும் நிலையில் ஒரு சில நாடுகளில் கொரோனா தொற்று அறவே இல்லை.

கிரிபாட்டிமார்ஷன் தீவுகள் மைக்ரோனேசியாநாருவட கொரியாபலூசமோசாலமன் தீவுகள் டோங்காடர்க்மெனிஸ்தான்டு வாலுவனுவாடுஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பின்றி மக்கள் விழிப்புடன் வாழ்கின்றனர். நெதர்லாந்து, இந்தோனேசிய தீவுகள், ஆஸ்திரேலியா பகுதிகளில் கொரோனா தொற்று மிகக் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கியக் காரணம் மேற்கண்ட நாடுகள் கொரோனா பரவத் தொடங்கிய 2019ம் ஆண்டு டிச., மாதமே விழித்துக்கொண்டதுதான் என கூறப்படுகிறது.

மேலும் சமூக விலகலை பொதுமக்கள் மதித்து நடந்துகொண்டதால் கொரோனா பாதிப்பு முற்றிலும் விலகியதாக கூறப்படுகிறது.

நாமும் நம்முடைய பிரதமர் மாநில அரசுகளின் அறிவுரையைப் பின்பற்றி நடந்துகொண்டால் கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.