தேசிய செய்திகள்

ஒரே பஸ்சில் 70 பயணிகளை ஏற்றிச் சென்ற டிரைவர், கண்டக்டர் பணி இடைநீக்கம் + "||" + Driver, Conductor Work Suspension

ஒரே பஸ்சில் 70 பயணிகளை ஏற்றிச் சென்ற டிரைவர், கண்டக்டர் பணி இடைநீக்கம்

ஒரே பஸ்சில் 70 பயணிகளை ஏற்றிச் சென்ற டிரைவர், கண்டக்டர் பணி இடைநீக்கம்
கர்நாடகாவில் ஒரே பஸ்சில் 70 பயணிகளை ஏற்றிச் சென்ற டிரைவர், கண்டக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு,

பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் சாலை போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) சார்பில் பெங்களூரு முழுவதும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. 56 நாட்கள் ஊரடங்கிற்கு பிறகு கடந்த 19-ந்தேதி முதல் பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒரு பஸ்சில் அதிகபட்சமாக 30 பயணிகள் மட்டுமே ஏற்ற வேண்டும் என்றும், பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து எலகங்காவுக்கு நேற்று முன்தினம் ஒரு பி.எம்.டி.சி. பஸ் சென்றது.

அந்த பஸ்சில் அரசு உத்தரவை மீறி 70 பேர் ஏற்றிச் செல்லப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பி.எம்.டி.சி. நிர்வாகம், அரசு உத்தரவை மீறி ஒரே பஸ்சில் 70 பயணிகளை ஏற்றிச் சென்றதற்காக அந்த பஸ்சின் டிரைவர் தீபு வர்மா, கண்டக்டர் கொண்டய்யா ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது

தொடர்புடைய செய்திகள்

1. சமூக வலைத்தளத்தில் பெண்ணின் ஆபாச படத்தை பதிவிட்ட டிரைவர் கைது
பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைத் தளத்தில் பதிவிட்ட டிரைவர் கைது செய்யப்பட்டார்.
2. 5-வது மாடியில் இருந்து குதித்து பொக்லைன் டிரைவர் தற்கொலை தர்மபுரி அரசு மருத்துவமனையில் பரபரப்பு
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற பொக்லைன் டிரைவர் தர்மபுரி அரசு மருத்துவமனையின் 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
3. ஆசனூர் அருகே 20 அடி பள்ளத்தில் பாய்ந்த டேங்கர் லாரி லேசான காயத்துடன் டிரைவர் உயிர் தப்பினார்
ஆசனூர் அருகே 20 அடி பள்ளத்தில் டேங்கர் லாரி பாய்ந்தது. இந்த விபத்தில் லேசான காயத்துடன் டிரைவர் உயிர் தப்பினார்.
4. ஆட்டோ டிரைவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை
திருச்சியில் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட சென்ற ஆட்டோ டிரைவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 8 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
5. நெய்வேலியில் கலெக்டரின் உதவியாளர் வீட்டில் டிரைவர் மர்ம சாவு
நெய்வேலியில் கலெக்டரின் உதவியாளர் வீட்டில் வேன் டிரைவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, உறவினர்கள் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.