உலக செய்திகள்

இந்தியா - சீனா எல்லை தொடர்பான அமெரிக்க அதிகாரியின் கருத்து முட்டாள்தனமானது - சீன வெளியுறவு அமைச்சகம் + "||" + ‘Just nonsense’: China disses US official for dart over Sino-India border tension

இந்தியா - சீனா எல்லை தொடர்பான அமெரிக்க அதிகாரியின் கருத்து முட்டாள்தனமானது - சீன வெளியுறவு அமைச்சகம்

இந்தியா - சீனா எல்லை தொடர்பான அமெரிக்க அதிகாரியின் கருத்து முட்டாள்தனமானது - சீன வெளியுறவு அமைச்சகம்
இந்தியா - சீனா எல்லை தொடர்பான அமெரிக்க அதிகாரியின் கருத்து முட்டாள்தனமானது என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியான் கூறியுள்ளார்.
பிஜீங்,

எல்லை தொடா்பான விவகாரங்களில் தென்சீனக் கடலைச் சுற்றியுள்ள நாடுகள், இந்தியா ஆகியவற்றுக்கு சீனா தொல்லை கொடுத்து வருவதாக அமெரிக்க உயர் அதிகாரி ஆலிஸ் ஜி.வெல்ஸ் குற்றம்சாட்டி இருந்தார். இந்தநிலையில்,  எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக ஆலிஸ் ஜி.வெல்ஸ் கருத்து கூறியதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.


இது தொடா்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியான் செய்தியாளா்களிடம் கூறியதாவது:-

அண்மையில் சீன-இந்தியா எல்லைப் பதட்டத்தை அமெரிக்கா எடைபோடுவது வெறும் முட்டாள்தனம்.

இந்தியாவுடனான எல்லைப் பகுதியில் அமைதியை ஏற்படுத்த சீன ராணுவத்தினா் முயன்று வருகின்றனா். இந்தியாவின் அத்துமீறல் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கிலேயே எல்லைப் பகுதியில் ராணுவத்தினா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எல்லை விவகாரம் தொடா்பாக சீனாவுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இந்தியாவிடம் தொடா்ந்து கோரி வருகிறோம். எல்லை விவகாரம் குறித்து இரு நாடுகளுக்குமிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எந்தத் தொடா்பும் இல்லை. அமெரிக்க உயரதிகாரியின் கருத்துகள் முற்றிலும் பொருத்தமற்றவை. அமெரிக்காவுடன் எந்த தொடர்பும் இல்லாத இரு தரப்பினருக்கும் இடையே ஆலோசனைகள் மற்றும் இராஜதந்திர சேனல்கள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.