தேசிய செய்திகள்

ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று முதல் இயங்கும்-ரெயில்வே வாரியம் அறிவிப்பு + "||" + Train Ticket Reservation Counters To Open At Select Railway Stations From Today

ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று முதல் இயங்கும்-ரெயில்வே வாரியம் அறிவிப்பு

ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று முதல் இயங்கும்-ரெயில்வே வாரியம் அறிவிப்பு
ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று முதல் இயங்கும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை, 

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ரெயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 200 ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ரெயில்களுக்கு ஆன்-லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதைத்தொடர்ந்து டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று(வெள்ளிக் கிழமை) முதல் இயங்கவும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மண்டல முதன்மை தலைமை வர்த்தக மேலாளருக்கு ரெயில்வே வாரியத்தில் இருந்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

இன்று முதல் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அந்தந்த மண்டலங்களில் எத்தனை டிக்கெட் கவுண்ட்டர்கள் திறந்திருக்க வேண்டும் என முதன்மை தலைமை வர்த்தக மேலாளர் முடிவு செய்து கொள்ளவேண்டும். 

டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் சமூக இடைவெளி விட்டு நிற்கவும், மேலும் சுகாதார விதிமுறைகளையும் கடைப்பிடிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கொரோனா
தமிழக அரசின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
2. குடியாத்தம் தாலுகாவில் 38 பேருக்கு கொரோனா
குடியாத்தம் தாலுகாவில் 38 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
3. ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,97,599 ஆக உயர்வு
ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 8,97,599 ஆக உயர்ந்துள்ளது
4. இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங்கும் கொரோனாவால் பாதிப்பு
இந்திய ஆக்கி அணியின் வீரர் மன்தீப் சிங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
5. ஜி.எஸ்.டி. வரி ரசீது போலியாக தயாரித்து ரூ.182 கோடி மோசடி-வங்கி அதிகாரி உள்பட 2 பேர் கைது
ஜி.எஸ்.டி. வரிக்கான ரசீதுகளை போலியாக தயாரித்து ரூ.182 கோடி மோசடி செய்தது தொடர்பாக வங்கி அதிகாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.