மாநில செய்திகள்

ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக்க அவசர சட்டம் பிறப்பிப்பு + "||" + Veda Nilayam set to become Jayalalithaa memorial

ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக்க அவசர சட்டம் பிறப்பிப்பு

ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக்க அவசர சட்டம் பிறப்பிப்பு
ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக்க தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.
சென்னை,

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லம் என்ற பெயரிடப்பட்ட பங்களா வீட்டில் தமிழக முன்னாள் முதல் அமைச்சர் மறைந்த ஜெயலலிதா வாழ்ந்து வந்தார்.  அவரது மறைவுக்கு பின், அதனை நினைவு இல்லம் ஆக மாற்றப்படும் என்று  முதல் அமைச்சர் பழனிசாமி  கடந்த 2017-ல் ஆக. 17 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். 

இதையடுத்து, ஜெயலலிதா வசித்த இல்லத்தை நினைவிடமாக்குவதற்கான நடவடிக்கைகளை கடந்த 3 ஆண்டுகளாகவே தமிழக அரசு  மேற்கொண்டு வந்தது.  இந்த நிலையில், ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக மாற்ற ஆளுநர் ஒப்புதல்  அளித்துள்ளார். 

இதன்படி, வேதா நிலையத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுகிறது.  புரட்சி தலைவி ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை அமைத்து பணிகளை துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.
2. ஜெயலலிதா வாழ்ந்த வீடு நினைவு இல்லம் ஆவது எப்போது? - அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்
ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்தார்.
3. அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
அ.தி.மு.க. சார்பில் சங்கராபுரம் மற்றும் திருக்கோவிலூர் பகுதியில் ஜெய லலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
4. ஜெயலலிதா பிறந்தநாள்: பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் - எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
5. ஜெயலலிதா 72-வது பிறந்தநாள் விழா: அ.தி.மு.க. அலுவலகத்தில் 72 கிலோ ‘கேக்’ வெட்டி கொண்டாட்டம் - எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு
ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி, அ.தி.மு.க. அலுவலகத்தில் 72 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.