தேசிய செய்திகள்

ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாக குறைப்பு - ரிசர்வ் வங்கி ஆளுநர் + "||" + The repo rate cut by 40 basis points from 4.4 % to 4%. Reverse repo rate stands reduced to 3.35%: Reserve Bank of India (RBI) Governor Shaktikanta Das

ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாக குறைப்பு - ரிசர்வ் வங்கி ஆளுநர்

ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாக குறைப்பு - ரிசர்வ் வங்கி ஆளுநர்
ரெப்போ வட்டி விகிதம் 0.40 புள்ளிகளாக குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
புதுடெல்லி,

ரிசர் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
  1. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 
  2. ரெப்போ வட்டி விகிதம் 0.40 புள்ளிகள் குறைக்கப்படுகிறது. இதன்படி, 4.4 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக ரெப்போ வட்டி விகிதம் குறைகிறது.
  3. ரிசர்வ் வங்கியின் பணிகள் தொய்வடையாமல் இருக்க 200 அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். 
  4. குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் வழங்கும்.
  5. 11 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உலக பொருளாதாரம் சரிவு கண்டுள்ளது. 
  6. உலக பொருளாதாரம் 13 சதவிகிதம் முதல் 32 சதவிகிதம் வரையிலான அளவிற்கு சுருங்கக்கூடும்.
  7. நகர்புற கிராமப்புற தேவைகள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன.
  8. வேளாண் துறை வளர்ச்சியடைந்து வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. 
  9. கொரோனா தாக்கத்தால் உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகள் கடும் தாக்கத்தை சந்தித்துள்ளன.
  10.  மத்திய அரசின் வரிவசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 


தொடர்புடைய செய்திகள்

1. கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லும் அவசர சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்
மாநில மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லும் அவசர சட்டத்தை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
2. கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
3. கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வர முடிவு - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு
நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
4. கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாதங்கள் அவகாசம்- ரிசர்வ் வங்கி ஆளுநர்
வீடு, வாகன கடன்களுக்கான கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக மூன்று மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ரிசர் வங்கி தெரிவித்துள்ளது.
5. விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் உதவும்- பிரதமர் மோடி
விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.