தேசிய செய்திகள்

கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாதங்கள் அவகாசம்- ரிசர்வ் வங்கி ஆளுநர் + "||" + Measures announced today can be divided into 4 categories ;RBI

கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாதங்கள் அவகாசம்- ரிசர்வ் வங்கி ஆளுநர்

கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாதங்கள் அவகாசம்- ரிசர்வ் வங்கி ஆளுநர்
வீடு, வாகன கடன்களுக்கான கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக மூன்று மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ரிசர் வங்கி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 • அடுத்த சில மாதங்களில் பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர வாய்ப்பு உள்ளது.
 • சந்தை பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். 
 • ரிசர்வ் வங்கியால் குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் அளிக்கும்
 • ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்தவும் மாநிலங்களுக்கான நிதிப் பிரச்சினைகளை சரி செய்யவும் வங்கி நடவடிக்கை

 • 2020-21 ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும்.
 • தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு பற்றாக்குறையை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
 • மூலதன கடன்கள் அளிக்கப்படும். 
 • மேலும் 3 மாதங்களுக்கு சிறு தொழில்களுக்கு கடன் வழங்க ஏற்பாடு

 • மாதத் தவணை செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது.
 • கால அவகாசம் ஜூன் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 • கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டெழும்
 • உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும்.
 • தொழில்துறை உற்பத்தி மார்ச் மாதத்தில் 17 சதவிகிதம் குறைந்துள்ளது.
 • ஜிடிபி வளர்ச்சி வரும் காலாண்டில் எதிர்மறையாக இருக்கும். 
 • வீடு, வாகன  கடன்களுக்கான கடன்  தவணைகளை செலுத்த கூடுதலாக  மூன்று மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. என்று ரிசர் வங்கி தெரிவித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாக குறைப்பு - ரிசர்வ் வங்கி ஆளுநர்
ரெப்போ வட்டி விகிதம் 0.40 புள்ளிகளாக குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
2. விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் உதவும்- பிரதமர் மோடி
விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
3. ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி வரவேற்பு
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
4. யெஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு
‘யெஸ் பேங்க்’ பல மோசமான கடன்களை வழங்கியதால் மூலதன நெருக்கடியில் உள்ளது. இதைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கி நேற்று யெஸ் வங்கிக்கு சில காலம் கடன்கள் வழங்குவதை நிறுத்திவைக்கும்படி கட்டுப்பாடு விதித்தது.
5. ரிசர்வ் வங்கி பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது - சக்திகாந்த தாஸ்
இந்திய பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதில் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்துகிறது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.