தேசிய செய்திகள்

வரும் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் விமான சேவை தொடங்க வேண்டாம்-பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் + "||" + Chief Minister Palanisamy's letter to Prime Minister

வரும் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் விமான சேவை தொடங்க வேண்டாம்-பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

வரும் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் விமான  சேவை தொடங்க வேண்டாம்-பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
தமிழகத்தில் விமான சேவையை ஜூன் மாதத்திற்கு பிறகு தொடங்கலாம் என பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில், வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என்று அந்த துறையின் மந்திரி ஹர்தீப் சிங் பூரி நேற்றுமுன்தினம் அறிவித்தார். 

இதன்படி, வரும் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் படிப்படியாக விமான சேவை தொடங்கப்பட உள்ளது உள்நாட்டு விமான சேவையில் சென்னை, கோவையில் இருந்தும் விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், வரும் 25 ஆம் தேதி தமிழகத்தில் விமான சேவை தொடங்க வேண்டாம் என்று முதல் அமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.  ஜூன் மாதத்திற்கு பிறகு தொடங்கலாம் என பிரதமருக்கு முதல் அமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வெளிமாநில தொழிலாளர்கள் நடந்து செல்ல வேண்டாம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
வெளி மாநில தொழிலாளர்கள் நடந்து செல்ல வேண்டாம் என்று தமிழக முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. கொரோனாவால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வோம்- முதல்வர் பழனிசாமி
கொரோனாவால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வோம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
3. சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
4. மே 31 வரை ரெயில், விமான போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கக்கூடாது- முதலமைச்சர் வலியுறுத்தல்
மே 31 வரை ரெயில், விமான போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கக்கூடாது என்று பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
5. ’மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு’- முதல் அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
ஏப்ரல் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு மேலும் 2 மாத பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாக முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.