மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைப்பு + "||" + in Chennai Reduction of Corona Isolated Areas

சென்னையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைப்பு

சென்னையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைப்பு
சென்னையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடங்களை தனிமைப்படுத்தி, அந்த பகுதியில் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 776 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர் போன்ற மண்டலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.

இதையடுத்து சென்னையில் 758 இடங்கள் கொரோனா கட்டுபாட்டு பகுதியாக பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 130 இடங்களும், திரு.வி.க. நகர் மண்டலத்தில் 124 இடங்களும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 80 மற்றும் அம்பத்தூர் மண்டலத்தில் 77 இடங்களும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 774 இருந்து 655 ஆக குறைக்கப்பட்டுள்ளன. ராயபுரம் மண்டலத்தில் 164 ஆக இருந்த தெருக்களின் எண்ணிக்கை 135 ஆக குறைக்கப்பட்டுள்ளன, திரு.வி.க.நகர் மண்டலம் - 124ல் இருந்து 105 ஆக குறைக்கப்பட்டுள்ளன. 

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து 86 பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு 216 ரூபாய் உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 216 ரூபாய் உயர்ந்துள்ளது.
2. சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்தது - மாநகராட்சி தகவல்
சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
3. சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு-மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை
சென்னை, டெல்லி, மும்பை ஆகிய பெருநகரங்களில் கொரோனா பரவல் விகிதம் சரிந்துள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. எனினும் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
4. சென்னையில் ரக்‌ஷாபந்தன் கொண்டாட்டம்; ராக்கி கயிறு கட்டி பெண்கள் வாழ்த்து
சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்‌ஷாபந்தன் திருவிழாவை முன்னிட்டு சென்னையில், ராக்கி கயிறு கட்டி பெண்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
5. சென்னையில் விடிய விடிய பரவலாக கனமழை
சென்னையில் விடிய விடிய பரவலாக கனமழை பெய்துள்ளது.