மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + In TamilNadu Coronation affects 786 people in one day

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.  கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.  இந்த உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அதிக அளவாக 846 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 6,282 ல் இருந்து 7128 ஆக உயர்ந்து உள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,967ல் இருந்து 14,753 ஆக உயர்ந்து உள்ளது.  இன்று 4 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 94ல் இருந்து 98 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் ஒரே நாளில் 805 பேருக்கு தொற்று: 88 சதவீதம் பேருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 88 சதவீதம் பேருக்கு அறிகுறியே இல்லை எனவும் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
2. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,576 ஆக உயர்ந்துள்ளது.
3. தமிழகத்துக்கு ஏசி வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்கள் இயக்க தமிழக அரசு கோரிக்கை
தமிழகத்துக்கு ஏசி வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்கள் இயக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
4. தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி - தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
5. தமிழகம், கேரளாவை சேர்ந்தவர்கள் கர்நாடகத்திற்குள் நுழைய தடை: எடியூரப்பா அறிவிப்பு
தமிழகம், கேரளாவை சேர்ந்தவர்கள் கர்நாடகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக, கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.