உலக செய்திகள்

குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய பாகிஸ்தான் பயணிகள் விமானம்... வெளியான கடைசி நிமிட வீடியோ + "||" + Video shows the final moments of doomed Airbus A320 before it crashes into residential area of Karachi killing all 107 aboard after 'losing both engines following failed landing attempt'

குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய பாகிஸ்தான் பயணிகள் விமானம்... வெளியான கடைசி நிமிட வீடியோ

குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய பாகிஸ்தான் பயணிகள் விமானம்... வெளியான கடைசி நிமிட வீடியோ
107 பேருடன் விழுந்து நொறுங்கிய பாகிஸ்தான் பயணிகள் விமானம்... அனைவரும் பலி! வெளியான கடைசி நிமிட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
கராச்சி

பாகிஸ்தானில் 99 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் லாகூரில் இருந்து கராச்சி சென்ற விமானம் கராச்சியின் குடியிருப்பு பகுதியில், கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் இதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து உள்ளனர்.குடியிருப்பில் விழுந்ததால் அங்கிருந்த மக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

அதுமட்டுமின்றி விமான விபத்தில் சிக்குவதற்கு முன்னர் சில நிமிடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட விடியோ வைரலாகி வருகிறது.விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதால், இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளவர்கள் இராணுவத்தினர் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்கும் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்ட டுவீட்டில், விமான விபத்தால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். கராச்சிக்கு புறப்பட்ட பிஐஏ தலைமை நிர்வாக அதிகாரி அர்ஷத் மாலிக் மற்றும் மீட்பு மற்றும் நிவாரண குழுக்களுடன் தொடர்பில் இருக்கிறேன். உடனடி விசாரணை தொடங்கப்படும். இறந்தவரின் குடும்பங்களுக்கு பிரார்த்தனைகள் மற்றும் இரங்கல்கள். இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்தார்

கொரோனா வைரஸால் ஊரடங்கு காரணமாக பாகிஸ்தானில் விமானப் போக்குவரத்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மீண்டும் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கப்பட்ட நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் விமான விபத்துக்கு விமானி காரணமா? - கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கைகளை புறக்கணித்தார்
பாகிஸ்தான் விமான விபத்துக்கு விமானி காரணமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
2. பாகிஸ்தான் விமான விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு
பாகிஸ்தான் விமான விபத்தில் பலியானோர் அனைவரும் விமானி பயணிகள்தான் என்பது தெரியவந்துள்ளது.
3. பாகிஸ்தான் விமான விபத்து... அதிர்ஷ்டவசமாக தப்பிய விமான பணிப்பெண்! எப்படி?
பாகிஸ்தானில் 97 பேர் உயிரிழந்த விமான விபத்து... அதிர்ஷ்டவசமாக தப்பிய விமான பணிப்பெண்!
4. பாகிஸ்தான் விமான விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
பாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.