தேசிய செய்திகள்

மராட்டியத்தில் மேலும் 2,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Maharashtra records highest spike of 2940 COVID-19 cases in a single day today, 44,582: State Health Department

மராட்டியத்தில் மேலும் 2,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டியத்தில் மேலும் 2,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் மேலும் 2,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மும்பை,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது.  நாட்டில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.  எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. நேற்று வரை மட்டும் மராட்டியத்தில்  மொத்தம், 41,642 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மராட்டிய மாநிலத்தில் மட்டும் கொரோனாவுக்கு  1454- பேர் உயிரிழந்துள்ளனர்.  பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 11726- ஆக உள்ளது. 

இந்நிலையில் மராட்டியத்தில் மேலும் 2,940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,642 லிருந்து 44,582 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலியனவர்களின் எண்ணிக்கை 1454 லிருந்து 1517 ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 10,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 10,483 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தை புரட்டி எடுக்கு கொரோனா: இன்று மேலும் 11,514 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 11,514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 10,221 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்
மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 10,221 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
4. மராட்டியத்தில் கொரோனா பாதித்த போலீசார் எண்ணிக்கை 9,566 ஆக உயர்வு
மராட்டியத்தில் கொரோனா பாதித்த போலீசார் எண்ணிக்கை 9,566 ஆக உள்ளது என்று அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
5. மராட்டியத்தில் 10-வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியாகிறது
மராட்டியத்தில் 10-வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியாகிறது.