தேசிய செய்திகள்

டெல்லியில் மேலும் 5 சிஆர்பிஎப் காவலர்களுக்கு கொரோனா தொற்று + "||" + 5 more CRPF personnel in Delhi test positive for COVID-19

டெல்லியில் மேலும் 5 சிஆர்பிஎப் காவலர்களுக்கு கொரோனா தொற்று

டெல்லியில் மேலும் 5 சிஆர்பிஎப் காவலர்களுக்கு கொரோனா தொற்று
டெல்லியில் மேலும் 5 சிஆர்பிஎப் காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பொது மக்களை மட்டுமின்றி சுகாதாரத் துறையினர், காவல் துறையினர், துப்புரவு பணியாளர்கள், மற்றும் ராணுவ வீரர்கள் உள்பட அனைவரையும் தாக்க தொடங்கி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 


இந்தநிலையில்  இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,18,447 ஆக உள்ளது. இவற்றில் 66,330 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை இந்த நோய்க்கு 3,583 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 148 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் மேலும் 5 சிஆர்பிஎப் காவலர்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி டெல்லியில் 340 சிஆர்பிஎப் காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 125 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

213 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் மட்டுமே பலியாகியுள்ளனர் என சிஆர்பிஎப் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது