உலக செய்திகள்

கொரோனாவால் வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்? சிறுவர்களை அதிகம் பாதிக்காதது ஏன்? + "||" + What we know about the Covid-related syndrome affecting childran

கொரோனாவால் வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்? சிறுவர்களை அதிகம் பாதிக்காதது ஏன்?

கொரோனாவால் வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்? சிறுவர்களை அதிகம் பாதிக்காதது ஏன்?
பெரியவா்களோடு ஒப்பிடுககையில் சிறுவா்களுக்கு கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு அதிகம் ஏற்படாதது ஏன் என்பது குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
வாஷிங்டன்,

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், இந்த வைரஸ் தொற்றுக்கு வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதோடு, மரணத்தை சந்திக்கிறார்கள். இதுவரை கொரோனா வைரஸால் மரணித்தவர்களைப் பார்த்தால், அது வயதானவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள்.


60 வயதிற்கு மேற்பட்டோரைத் தாக்கும் கொரோனா வைரஸ், நிலைமையை இருமடங்கு மோசமாக்குவதாக சில ஆய்வுகளில் தெரிகிறது. மேலும் இதய நோய், நுரையீரல் நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் உள்ளோருக்கு இந்த வைரஸ் தாக்குதலின் அபாயம் அதிகம் இருப்பதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன.

இந்நிலையில்  பெரியவா்களோடு ஒப்பிடுககையில் சிறுவா்களுக்கு கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு அதிகம் ஏற்படாதது ஏன் என்பது குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா்.

இதுகுறித்து, அந்த நாட்டின் இசான் மருத்துவக் கல்லூரி விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாவது:

சிறுவா்களுக்கு கொரோனா நோய்த்தொற்றால் அதிகம் பாதிப்பு ஏற்படாதது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நியூயார்க்கில் 4 முதல் 60 வயது வரையிலான கொரோனா நோயாளிகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதில், பெரியவா்களை விட சிறுவா்களின் மூக்கு உள் பகுதியில் 'ஏசிஇ-2' எனப்படும் மரபீனி சார்ந்த பொருள்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பது தெரிய வந்தது. வயது அதிகரிக்க அதிகரிக்க, இந்த மரபீனி பொருள்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த 'ஏசிஇ-2'வைப் பயன்படுத்திதான் கொரோனா கிருமி உடல் செல்களில் இணைந்து அதிகமாக பெருகுகின்றது.

சிறுவா்களுக்கு அந்தப் பொருள் மிகக் குறைவான எண்ணிக்கையில் இருப்பதால் கொரோனா கிருமிகளால் அதிகம் பெருக முடிவதில்லை. இதன் காரணமாக அவா்களுக்கு கொரோனா நோய்த்தொற்று மிகக் குறைந்த பாதிப்பையே ஏற்படுத்துகிறது.

இதன் காரணமாகவே கொரோனா நோயால் சிறுவா்கள் உயிரிழக்கும் விகிதமும் மிகக் குறைவாக உள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது